சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த தருணம் இன்று வந்துவிட்டது. ஜெயிலர் 2 திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிவிட்டது. 2023ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியை ஈட்டிய ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக வரும் இந்தப் படம், ரஜினிகாந்தின் ரசிகர்களிடையே பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்குகளுக்கு முன்பாகவே ரசிகர்கள் திரண்டு, பட்டாசுகள் வெடித்து, நடனமாடி, கொண்டாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் காலை ஒன்பது மணியிலிருந்து காட்சிகள் தொடங்கியிருந்தாலும், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிகாலை ஆறு மணியிலேயே முதல் காட்சிகள் தொடங்கிவிட்டன. உலகின் பல பகுதிகளிலும் ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ரஜினிகாந்த் மீண்டும் டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

ஓய்வு பெற்ற சிறை அதிகாரியாக இருந்தாலும், தனது குடும்பத்திற்கு ஆபத்து நேரும்போது அவர் எழுந்து நிற்கும் கதைதான் படத்தின் அடிப்படை. முதல் பாகத்தில் இருந்த அதே ஸ்டைலும், மாஸ் காட்சிகளும் இதிலும் தொடர்கின்றன என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். அதேசமயம் எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, வித்யா பாலன் போன்ற புதிய முகங்களும் சேர்ந்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தரின் இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படம், சாதாரண திரையரங்குகளுடன் ஐமேக்ஸ் திரைகளிலும் வெளியாகி வருகிறது.
இதையும் படிங்க: 80 அடி ரஜினி போஸ்டர்..! ஜெயிலர் 2 கொண்டாட்டம்..! மதுரையை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!!
படம் வெளியாகும் நாளில் திரையரங்குகளுக்கு வெளியே காணப்படும் காட்சிகள் வழக்கமானவை அல்ல. ரசிகர்கள் குழுக்களாக வந்து பேனர்கள் வைத்து, தலைவர் படங்களை வைத்து பூஜைகள் செய்து, பாடல்களுக்கு நடனமாடிக் கொண்டிருக்கின்றனர். சில இடங்களில் பால் ஊற்றி வரவேற்பு தெரிவிக்கும் காட்சிகளும் காணப்படுகின்றன. முன்பதிவுகளிலேயே படம் பெரும் வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. முதல் நாள் காட்சிகளுக்கு டிக்கெட்டுகள் விரைவாக விற்றுத் தீர்ந்துவிட்டன. வெளிநாடுகளிலிருந்தும் ரசிகர்கள் வந்து காட்சிகளைக் காணத் திரண்டுள்ளனர்.
இதையும் படிங்க: டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!!