ஜப்பானின் அயிச்சி-நாகோயாவில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி மொத்தம் 85 பதக்கங்களை வென்றது. இதில் 21 தங்கம், 27 வெள்ளி மற்றும் 37 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். பதக்கப் பட்டியலில் நான்காம் இடத்தைப் பிடித்த இந்திய அணி, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக முதல் ஐந்து நாடுகளில் இடம் பெற்றது.
இந்த வெற்றிக்குப் பிறகு, பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் மற்றும் இந்திய அணியின் உறுப்பினர்களைப் பாராட்டும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு சந்திப்பை நடத்தினார். இன்று புதுடெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டு மைதானத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

மாலை சுமார் 4.30 மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சியில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்கள், பயிற்சியாளர்கள், துணை ஊழியர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க அதிகாரிகள், தேசிய விளையாட்டு சம்மேளனப் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அடேங்கப்பா... ஆசிய விளையாட்டு போட்டி... வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்..!!
மத்திய விளையாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் இதில் பங்கேற்றார்.பிரதமர் மோடி இந்திய அணியை நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் அவருக்கு ஜெர்சி மற்றும் ஹாக்கி குச்சிகளைப் பரிசளித்தன. அதேபோல் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளும் ஜெர்சிகளை வழங்கி பெருமைப்படுத்தின.
இதையும் படிங்க: சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!