அதாவது, ரேவதிக்கு திடீர் என உடம்பு முடியாமல் போக கார்த்திக் அவளுக்கு மருந்து மாத்திரை வாங்கி கொடுத்து கேர் எடுத்து பார்த்துக் கொள்கிறான்.
இதையடுத்து மயில் வாகனம் மற்றும் ரோகினி ஆகியோர் கோவிலுக்கு வருகின்றனர். சிவனாண்டி இவர்களை யாக பூஜைக்கு அனுப்ப கூடாது என்று திட்டமிட்டு சதி திட்டம் தீட்ட ரோஹிணிக்கு அடிபட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்படுகிறாள்.

ரோகினிக்கு ரத்தம் ஏற்ற வேண்டும் என மருத்துவர் கூறும் நிலையில், O நெகட்டிவ் ரத்தம் தேவைப்படுவதாக டாக்டர் சொல்கிறார். வீட்டில் யாருக்கும் O நெகட்டிவ் ரத்தம் இல்லை என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகின்றனர்.
இதையும் படிங்க: Karthigai Deepam: கார்த்தியிடம் நடந்த டீலிங்... துப்பாக்கியை கையில் தூக்கிய ரேவதி!
ஒரு கட்டத்தில் மயில் வாகனத்திற்கு பாட்டிக்கு O நெகட்டிவ் தான் என தெரிய வந்து பாட்டியை அழைத்து வருகிறான். பரமேஸ்வரியை பார்த்த சாமுண்டீஸ்வரி இங்க எதுக்கு வந்த என்று ஆவேசப்படுகிறாள்.
என் பொண்ணு செத்தாலும் பரவாயில்லை அவளுக்கு நீ ரத்தம் கொடுக்க கூடாது என்று கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பாருங்கள்.
இதையும் படிங்க: Karthigai Deepam: ரேவதி எடுத்து முடிவு... கார்த்திக் கொடுத்த வார்னிங்! கார்த்திகை தீபம் அப்டேட்!