• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சொந்த கட்சிக்கே கைகொடுக்காத பி.கே.வியூகம்: விஜய்க்கு ஒர்க் அவுட் ஆகுமா..?- தொடரும் சறுக்கல்கள்..!

    பிரசாந்த் கிஷோர், தன் சொந்தக் கட்சியை பீகாரில் வெற்றி பெற வைக்க தடுமாறிப் போனதையும் கவனிக்க வேண்டியுள்ளது என விளாசுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
    Author By Thiraviaraj Thu, 27 Feb 2025 13:03:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Prasanth kishore's strategy that doesn't work for his own party: Will it work out for Vijay?

    தேர்தல் வியூக வகுப்பாளர், அரசியல் சாணக்கியர் என்றெல்லாம் கூறப்படும் பிரசாந்த் கிஷோர் 2011 ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகளின் பொது சுகாதாரத் திட்டங்களில் பணிபுரிந்து வந்தவர். 2012 ஆம் ஆண்டு குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக அரசியல் வியூக வகுப்பாளராக அடியெடுத்து வைத்தார். 1998-ல் இருந்து முதலமைச்சராக மோடி இருந்து வந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு பாஜகவில் தேர்தலில் பாஜக வெல்வதற்கு பிரசாந்த் கிஷோரின் வியூகம் பெரிதாக கை கொடுக்கவில்லை என்று சொல்லப்பட்டது.

    Prasanth kishore

    எப்படியும்  2012 ஆம் ஆண்டு குஜராத் தேர்தலில் மோடிதான் முதலமைச்சராவார் என்று தெரிந்த பிறகும், அந்த கட்சிக்கு வியூகம் வகுத்து கொடுத்ததாக தன்னை பெரிதாக முன்வைத்துக் கொண்டார் பிரசாந்த் கிஷோர் என்று விமர்சிக்கப்பட்டது. இன்னும் சொல்லப் போனால் 2007-ல் வென்றதை விட இரண்டு தொகுதிகளை குறைவாக வேண்டி இருந்தது பாஜக. அதேபோல 2015 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதீஷ் குமாருக்கு, பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார்.

    இதையும் படிங்க: இந்திக்கு எதிராக கையெழுத்து... விஜய்யை அவமதித்த பி.கே... அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்..!

    அந்த தேர்தலில் 101 இடங்களில் போட்டியிட்ட நிதிஷ்குமாரின் ஜனதா தளம் 70 இடங்களை மட்டுமே வென்றது. அதேவேளை லல்லு பிரசாத் யாதவின் கட்சி 80 இடங்களை வென்று கூட்டணியின் முக்கிய கட்சியாக இருந்தது. ஆனால் ,நிதீஷ் குமாரே முதலமைச்சர் ஆக்கப்பட்டார். இரண்டே வருடத்தில் கூட்டணியை உடைத்து ஜனதா தளமும், பாஜகவும் கூட்டணி அமைத்தன. எந்த வாக்குறுதியை முன் வைத்து நிதீஷ் குமார் பீஹாரில் ஆட்சிக்கு வந்தாரோ, அதற்கு துரோகம் செய்துவிட்டார் என்ற விமர்சனங்களும் நிதீஷ்குமாரை நோக்கி எழுந்தது.

    Prasanth kishore

    பாஜக கூட்டணி உருவான பின்பு  பிரசாந்த் கிஷோர் தன்னை ராஷ்டிரிய ஜனதா கட்சியில் அதிகாரபூர்வமாக இணைத்துக் கொண்டார். அதன்பின் ஐபேக் எனும் வியூக நிறுவனத்தை தொடங்கி வியூக வகுப்பாளராக கட்சிகளுக்கு பணியாற்றவும் செய்தார். காங்கிரஸ் கட்சிக்காக உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பணிபுரிந்த பிரசாந்த் கிஷோரின் வியூகம், 2017 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசுக்கு கை கொடுக்கவில்லை. அந்த தேர்தலில் பாஜக 300 இடங்களில் வென்றபோது காங்கிரஸால் வெறும் ஏழு இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.

    Prasanth kishore

    அதன் பின் பிரசாந்த் கிஷோர் இந்தியாவின் பல்வேறு கட்சிகளுக்கு வியூக வகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். 2017 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் அம்ரித் சிங்கிற்கு பணியாற்றினார். 2019 ஆம் ஆண்டு ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியுடன் ஒப்பந்தம் போட்டார். 2020 ஆம் ஆண்டில் டெல்லியில் கெஜ்ரிவாலுக்கும் 2021- மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கும் வேலை செய்தார். தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினுக்கும் பணியாற்றியது ஐபேக் நிறுவனம். 

    இவர்கள் அனைவருமே தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்று உறுதியான காலகட்டத்தில் இவர்களுக்கு தேர்தல் பணி செய்து இருக்கிறார் பிரசாந்த் கிஷோர் என்கிற விமர்சனத்தை அவருக்கு பெற்று தந்தது. இதுவரை பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுத்த கட்சிகள் ஒன்று படுதோல்வியை தழுவி இருக்கின்றன அல்லது இந்த கட்சி தான் உறுதியாக வெற்றி பெறும் என்று தெரிந்து அந்தக் கட்சிக்கு தேர்தல் பணியாற்றி இருக்கிறார் பிரசாந்த் கிஷோர். இதுதான் அவர் மீது அரசியல் கட்சிகள் வைக்கும் பிரதானமான விமர்சனமாக உள்ளது. 2021 ஆம் ஆண்டு  தேர்தலுக்குப் பிறகு வியூக வகுப்பாளர் என்ற பணியை இனி தொடரவில்லை என்று பிரசாந்த் கிஷோர் அறிவித்தார்.

    Prasanth kishore

     2022 ஆம் ஆண்டு மே இரண்டாம் தேதி ஜன் சூராஜ் என்ற கட்சியை தொடங்கினார். பீகார் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனக்கூறி கட்சி தொடங்கிய பிரசாந்த் கிஷோர், 2024 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜன் சூராஜ் போட்டியிடும் என்று அறிவித்தார். ஜன் சூராகஜ் சார்பில் போட்டியிட்ட நான்கு வேட்பாளர்களில் மூன்று பேர் டெபாசிட் இழந்தனர். நான்கு தொகுதிகளில் தோற்று ஒயிட் வாஷ் ஆனது ஜன் சூராஜ் கட்சி.

    தற்போது தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்துள்ள பிரசாந்த் கிஷோர் அந்த கட்சிக்கு வியூக வகுப்பாளராக பணிபுரிய போவதில்லை என்று அறிவித்திருந்தாலும் அந்த கட்சியுடன் பயணிக்க இருப்பதாக கூறி இருக்கிறார். தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரை தமிழக மக்களுக்கு தவெக தலைவர் விஜய் நன்கு பரிச்யமானவர். இரண்டாம் ஆண்டு விழாவில் பேசிய பிரசாந்த் கிஷோர், எங்குமே தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும் என பேசாததும் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

    Prasanth kishore

    இந்தியாவையே ஆட்சி செய்ய வியூகம் வகுத்தவர், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, ஜெகன்மோகன் ரெட்டி, அரவிந்த் கெஜ்ரிவால் இவர்களை எல்லாம் ஆட்சி கட்டிலில் அமர வைத்தவன் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பிரசாந்த் கிஷோர், தன் சொந்தக் கட்சியை பீகாரில் வெற்றி பெற வைக்க தடுமாறிப் போனதையும் கவனிக்க வேண்டியுள்ளது என விளாசுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
     

    இதையும் படிங்க: 40 சீட்டு வாங்கி எம்.எல்.ஏ ஆக வரவில்லை... ஆட்சியை பிடிக்க வந்துள்ளோம்... ஆதவ் அர்ஜுன் விலாசல்

    மேலும் படிங்க
    சாவு பயத்தை காட்டிய இந்தியா.. பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்..!

    சாவு பயத்தை காட்டிய இந்தியா.. பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்..!

    உலகம்
    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    உலகம்
    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    இந்தியா
    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியா
    போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

    போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

    இந்தியா
    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    இந்தியா

    செய்திகள்

    சாவு பயத்தை காட்டிய இந்தியா.. பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்..!

    சாவு பயத்தை காட்டிய இந்தியா.. பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்..!

    உலகம்
    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    உலகம்
    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    இந்தியா
    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியா
    போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

    போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

    இந்தியா
    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share