அதாவது, ரத்னா அண்ணன் தன்னை திட்டுவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். சண்முகம் பரணி எல்லாம் உன் நல்லதுக்காக தான் பண்ணி இருக்கா என்று பேசுகிறான்.
அதைத்தொடர்ந்து ரூமுக்கு வந்த பரணி என்ன புதுசா எனக்கு சப்போர்ட் பண்ணி பேசுற என்று கேட்க சண்முகம் நியாயத்தை தான் பேசினேன் என்று சொல்கிறான். நீ என்னதான் பண்ணாலும் அமெரிக்கா போறது உறுதி என பரணி சொல்ல சண்முகம் மனதுக்குள் நீ அமெரிக்கா போ.. உன்னை நல்லபடியா அனுப்பி வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என நினைத்துக் கொள்கிறான்.

இதைத் தொடர்ந்து வீராவை வலையில் சிக்க வைத்து வேலையில் இருந்து துரத்தி அடிக்க வைஜெயந்தி ஸ்டேஷனிலிருந்து ஒரு ரவுடியை தப்பிக்க வைத்து அந்த பழியை வீராவின் மீது போடுகிறாள்.
இதையும் படிங்க: Anna serial: சண்முகத்தின் சபதம்... ஆச்சர்யத்தில் உறைந்த பரணி! அண்ணா சீரியல் அப்டேட்!
சண்முகம் வீராவின் வேலையை காப்பாற்ற காணாமல் போன ரவுடி தேடி கண்டுபிடித்து ஒப்படைத்து வீராவை காப்பாற்றுகிறான். இதைத்தொடர்ந்து சௌந்தரபாண்டி ஊர்க்காரர்களை அழைத்து வந்து இசக்கியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக சொல்கிறார்.
ஆனால் சண்முகம் இசக்கி அனுப்ப முடியாது என மறுப்பு தெரிவிக்க ஊர்காரர்கள் அதை நீ ஏம்பா சொல்ற, இசக்கி சொல்லட்டும் என்று சொல்ல இசக்கி சௌந்தரபாண்டி வீட்டுக்கு செல்வதாக சொல்லி ஷாக் கொடுத்து கிளம்பி செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்ப்போம்.
இதையும் படிங்க: Anna Serial: ஷண்முகம் வீட்டில் இருந்து கண்ணீரோடு வெளியேறும் பாக்கியம் - என்ன நடந்தது?