அதாவது, நவீன் ஹாஸ்பிடலில் கட்டை கவிழ்த்து விட்டு மயில்வாகனத்திடம் போனில் பேசி கொண்டிருக்க அப்போது உள்ளே வந்த துர்கா இவனை பார்த்து விட்டு கோபப்பட்டு வெளியே செல்கிறாள். அடுத்து சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் எல்லாரும் வீட்டில் இருக்க அப்போது பரமேஸ்வரி பாட்டி கோவில் கும்ப சாதத்துடன் வீட்டிற்குள் நுழைகிறாள்.
இது கோவில் திருவிழாவில் பங்கேற்றவங்க எல்லாரும் சாப்பிட வேண்டியது என்று சொல்ல சாமுண்டீஸ்வரி இப்படி ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிட்டு இந்த வீட்டிற்கு வந்துகிட்டே இருப்பியா, உனக்கு வெட்கமாகவே இல்லையா என்று அவமானப்படுத்தி வெளியே துரத்துகிறாள்.

வெளியே வந்த பரமேஸ்வரி பாட்டி கோவிலுக்கு சென்று முருகனிடம் புலம்ப, அங்கு கார்த்திக் வருகிறான். சாப்பாட்டை கொடுங்க நான் பார்த்து கொள்கிறேன் என்று வாங்கி கொண்டு வீட்டிற்கு வருகிறான். எல்லாரும் சாப்பிட உட்காரும் சமயத்தில் கார்த்திக் திட்டத்தின் படி மயில்வாகனம் கரண்ட் கட் செய்து விடுகிறான்.
இதையும் படிங்க: Karthigai Deepam: சிவனாண்டிக்கு தெரியவந்த உண்மை! சாமுண்டீஸ்வரிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி?
இதனால் எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து நிலா சோறு சாப்பிட கார்த்திக் கும்ப சாதத்தையும் சேர்த்து கொடுக்கிறான். குடும்பமாக சந்தோசமாக இருக்க சுவாதியை பாட சொல்லி சந்தோசமாக இருக்கின்றனர். இதையடுத்து மயில் வாகனம் மீண்டும் பவர் ஆன் செய்து விடுகிறான்.

சந்திரகலாவிற்கு பக்கத்தில் வீட்டில் எல்லாம் கரண்ட் இருக்க நம்ம வீட்டில் மட்டும் எப்படி கரண்ட் கட் ஆனது என்ற சந்தேகம் எழுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பாருங்கள்.
இதையும் படிங்க: Karthigai Deepam: கார்த்திக் செய்த சம்பவம் - மன்னிப்பு கேட்ட ரேவதி! காதல் மலருமா?