சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்த நிலையில், கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் தான் இருந்தது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: வாரத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்.. சற்று இறங்கிய தங்கம் விலை..!
தங்கம் விலை நிலவரம் (17/06/2025):
இந்நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) தங்கம் விலை தடாலடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 குறைந்து ஒரு சவரன் ரூ.73,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 குறைந்து ஒரு கிராம் ரூ.9,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.74 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை, இன்று மீண்டும் ரூ.74 ஆயிரத்திற்கு கீழ் இறங்கியுள்ளது இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.114 குறைந்து ஒரு கிராம் 10 ஆயிரத்து 037 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.912 குறைந்து 80 ஆயிரத்து 296 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை நிலவரம்:
தங்கம் விலை குறைந்த நிலையில், வெள்ளியின் விலையும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சற்று குறைந்துள்ளது. கிராமிற்கு 10 காசுகள் குறைந்து, ஒரு கிராம் 119 ரூபாய் 80 காசுகளுக்கும், ஒரு கிலோவிற்கு ரூ.100 குறைந்து ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

குறைவுக்கான காரணம் என்ன?
தங்கத்தின் விலை பெரும்பாலும் அமெரிக்க டாலருடன் தலைகீழ் தொடர்பு கொண்டது. டாலரின் மதிப்பு உயரும்போது, தங்கத்தின் விலை குறையும். இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக உயர்ந்தால், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
இதையும் படிங்க: நாளுக்கு நாள் எகிறும் தங்கம் விலை.. இன்னைக்கு ரேட் என்ன தெரியுமா..!