கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூரில், 21 வயது இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவரை ஆலந்துறை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 21 வயது இளம் பெண் ஒருவர், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தற்காலிக தேர்வு கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் விராலியூர் பகுதியில் தனது தோழிகளுடன் வாடகை வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் அருணன் (60) என்பவர் வசித்து வருகிறார். அருணனின் மனைவி உடல்நலக் குறைவால் படுக்கையில் இருந்ததால், அந்த இளம் பெண் மனிதாபிமான அடிப்படையில் அடிக்கடி அங்குச் சென்று அவரது உடல்நலனை விசாரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
வழக்கம் போல் கடந்த நேற்று காலையில் அருணனின் மனைவியைப் பார்ப்பதற்காக அந்தப் பெண் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பெண் சமையலறைப் பகுதியில் இருந்தபோது, அருணன் அவரைத் தனிமையில் மடக்கி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING போதையில் அரங்கேறிய பயங்கரம்... சென்னையில் 17 வயது சிறுமி நண்பர்களால் பாலியல் வன்கொடுமை...!
முதியவரின் இந்தச் செய்கையால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உதவி கேட்டு அலறியுள்ளார், பின்னர் அங்கேயே மயங்கி விழுந்தார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஆலந்துறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அருணனைக் கைது செய்தனர்.
இதையும் படிங்க: காலையிலேயே படுபயங்கரம்... வாயில் துணியை திணித்து சிறுமியை சீரழித்த 2 மிருகங்கள்...!