• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'கடமைகளைத் தட்டிக்கழிக்கும் சோம்பேறி...' திட்டிவிட்டு கமலின் மய்யத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை..!

    முழுநேர அரசியல் செய்யாமல் அவ்வரசியலிலிருந்து பொருள் ஈட்டாமல் இருக்க, மக்கள் பணத்தைச் சுருட்டாமல் இருக்க, சொந்தமாகப் பெரிய வணிக அல்லது பொருளாதாரப் பின்புலம் தேவை.
    Author By Thiraviaraj Thu, 30 Jan 2025 10:17:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    A famous actress who left Kamal's heart after scolding him for being 'lazy and evading duties.

    உண்மையை சொல்ல வேண்டும் எனில், மாற்றம் என்று களம் கண்ட கமல், நல்ல வரவேற்பை பெற்றார். ஆனால் அதை உதறித் தள்ளிவிட்டு சென்ற போது, மக்கள் அதை ரசிக்கவில்லை. எப்போதும் தலைமைப் பண்பு என்பது, தோல்விக்கு தானே பொறுப்பேற்பதில் இருந்து தொடங்கும். ராகுல் காந்தி ஏற்றார், அதனால் தான் கேரளா அவரை கொண்டாடுகிறது. கட்சிப் பணிகள் செய்ய நேரம் தேவை என்பதில்லை. கிடைக்கிற நேரத்தில் செய்யப்படுவதும் கட்சிப் பணி தான். சினிமா, அரசியல் என்கிறபோது அரசியலை நாலாம்பட்சமாக்கி விட்டார் கமல். அதனால், மையம் இப்போது ஓரமாகக் கூட இல்லை. மய்யம் சாயத்தொடங்கியபோதே பலர் அக்கட்சியை விட்டு விலகி விட்டார்கள். கொஞ்சம் நஞ்சம் இப்போரும் இப்போது விலகி வருகிறார்கள்.

    அந்த வகையில் நடிகை வினோதினி வைத்தியநாதனும், மய்யத்தில  இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்,''மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன். அரசியல் பெரிய கடல். அதில் முத்தெடுத்து, மக்களுக்குச் சேர்க்க, தனிப்பட்ட நபரால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்ய தேவை - எண்ணம், சிந்தனை, செயல், பணம்.என்னிடம் எண்ணமும் சிந்தனையும் மட்டுமே உள்ளது என்பதைக் காலம் புரியவைத்திருக்கிறது.

    Kamal

    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் செயலும், பணமும் எனது சொந்த வாழ்க்கைத் தரத்தை ஓரளவு முன்னேற்றுவதற்கும், நான் மேற்கொண்டுள்ள தெருவிலங்குகளின் (நாய், பூனை, ஒரு கோஷாலாவில் என் செலவில் வாழும் சில மாடுகள்) வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்குமே சென்றிருக்கிறது. ஹிந்தியில் ஒரு வார்த்தை இருக்கிறது. அதை நான் சொல்லிப்பல பேரைத் திட்டியிருக்கிறேன். காம்சோர் என்பதுதான் அந்த வார்த்தை. ஆங்கிலத்தில் சொன்னால் Slacker. கடமைகளைத் தட்டிக்கழிக்கும் சோம்பேறி. மய்யத்தில் நான் செய்தது காம்சோர். இதை ஒத்துக்கொள்வதில் தவறில்லை என்றும் இந்த உண்மையை வெளிப்படுத்துவதன் மூலம் எனக்கு மிகப்பெரிய சுதந்திரம் கிடைக்கிறது என்றும் நம்புகிறேன்.

    இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கு.. நீதிமன்றம் போங்க திருமா.. கார்த்தி சிதம்பரம் கொடுத்த வேற லெவல் ஐடியா.!

    பலர் இங்கு, கட்சி நடக்கிறதா? என்றெல்லாம் கேட்பார்கள். எப்பொழுதும் நான் சொல்வது - கட்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சிந்தியுங்கள். சிறு துளி கூட பெரு வெள்ளமாகும். அச்சிறு துளியைக்கூட நான் என் பல அலுவல்களுக்கு நடுவில்தான் செய்திருக்கிறேன். முழுமையாக அல்ல.

    Kamal

    அமெரிக்க அரசியலில் ஒரு term பயன்பாட்டில் உள்ளது. Career Politician. முழுமையாக அரசியலில் மட்டுமே இருப்பவர்கள், அரசியலையே தொழிலாகக்கொண்டவர்கள், அதிலிருந்தே சம்பாதிப்பவர்கள். ஆனால் அதை முறியடித்துத்தான் அத்தனை career politicianகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு Trump அதிபரானார். (அவர் அமெரிக்காவிற்கு சரியான தலைவரா இல்லையா என்பது வேறு விஷயம்). ஆனால் அங்குள்ள மக்களே உணர்ந்தது என்னவென்றால் - career politicianகளைவிட businessmanஆன Trump எல்லாவிதத்திலும் மக்களின் நலனுக்காக மக்கள் கஷ்டங்கள் தெரிந்து போராடுவார், இதைத்தான் அமெரிக்காவின் founding fathersஉம் விரும்பினர் என்று. ஆனால், அப்படி முழுநேர அரசியல் செய்யாமல் அவ்வரசியலிலிருந்து பொருள் ஈட்டாமல் இருக்க, மக்கள் பணத்தைச் சுருட்டாமல் இருக்க, சொந்தமாகப் பெரிய வணிக அல்லது பொருளாதாரப் பின்புலம் தேவை. அது என்னிடம் இல்லை.

    கட்சி எடுத்த பல நிலைப்பாடுகளைக் கேள்வி கேட்டிருக்கிறேன். பெருந்தன்மையோடு எனக்கு புரிய வைத்திருக்கின்றனர். யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்புக்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. தலைவரோடு நேரடியாக உரையாட, கேள்வி கேட்க, பற்பல நிகழ்ச்சிகளைத் துவக்க, பற்பல செயல்பாடுகளை முன்னெடுக்க. ஆனால் அவற்றையெல்லாம் நான் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

    Kamal

    நம்மவர் போன்ற மகத்தான தலைவனைத் தவறவிட்டது தமிழ்நாடு மட்டுமல்ல, வினோதினியும்தான். தொடர்ந்து என் எண்ணமும், சிந்தனையும் தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தியே இருக்கும். ஏனெனில், நான் பிறந்த இம்மண்ணுக்கு என் மக்களுக்கு என்னால் ஆன சிறு மாற்றத்தையாவது, குறைந்தபட்சம் சிந்தனையளிவிலாவது, இப்பிறவியில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.

    65 வயதிற்கு மேலும் தனது மூத்திரப்பையை கையில் ஏந்தி பகுத்தறிவு புகட்டிய அந்த தாத்தனைப்போல், இன்றும் எங்கள் மய்யத்தில் கொடி நட்டு, போஸ்டரடித்து, உறுப்பினர் சேர்த்து, ஒவ்வொரு தேர்தலின்போதும் அயராது களத்தில் இறங்கி வேலைசெய்யும் தொண்டனைப்போல், மக்கள் பிரச்சனை என்றால் களத்தில் குதிக்கும் ஒவ்வொரு கட்சியின் நிர்வாகிபோல் நானும் என் கணக்கைத் தொடங்கும் பொழுதுதான் அது அரசியல் அல்லாது, அறச் செயலாக மாறும்.

    அதுவரை, சிந்தனையில் மட்டுமே. அச்சிந்தனையை மெருகேற்றிய நம்மவருக்கும் அவர்பின் நின்ற, நிற்கும் அனைவருக்கும் நன்றிகளும் அன்பும்.தொடர்ந்து பயணிப்போம். சமரசமற்ற நடுவு நிலையிலிருந்தபடியே''எனத் தெரிவித்துள்ளார் .
     

    இதையும் படிங்க: ஆளுநர் பதவியின் கண்ணியம் காக்கணும்.. நடத்தை விதிகள் கொண்டு வாங்க.. நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்ப திமுக முடிவு!

    மேலும் படிங்க
    அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!

    அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!

    இந்தியா
    நடிகை ராய் லட்சுமியின் கலக்கல் பர்த்டே செலிப்ரேஷன்..! வாழ்த்துக்களை குவிக்கும் இளசுகள்..!

    நடிகை ராய் லட்சுமியின் கலக்கல் பர்த்டே செலிப்ரேஷன்..! வாழ்த்துக்களை குவிக்கும் இளசுகள்..!

    சினிமா
    துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

    துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

    இந்தியா
    ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த

    ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த 'கொமெனி'!

    உலகம்
    கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!

    கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஏகே 64 படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..! அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்..!

    ஏகே 64 படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..! அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்..!

    சினிமா

    செய்திகள்

    அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!

    அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!

    இந்தியா
    துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

    துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

    இந்தியா
    ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த 'கொமெனி'!

    ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த 'கொமெனி'!

    உலகம்
    கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!

    கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஏர் இந்தியாவில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்.. செயல்படாத என்ஜின்.. பாதியிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!

    ஏர் இந்தியாவில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்.. செயல்படாத என்ஜின்.. பாதியிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!

    தமிழ்நாடு
    வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share