உறுப்பு தானம் செய்வதன் மூலம் ஒரே ஒரு நபர் எட்டு உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பது மிகப் பெரிய சிறப்பு. இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், இரண்டு சிறுநீரகங்கள், சிறு குடல் போன்ற முக்கிய உறுப்புகளை ஒரு மூளைச்சாவு அடைந்த நன்கொடையாளரிடமிருந்து பெற்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு மாற்றி வைக்க முடியும். இதயம் பெறுபவர் மீண்டும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பலாம்; சிறுநீரகம் பெறுபவர் டயாலிசிஸ் இயந்திரத்தை நம்பியிருந்த நிலையிலிருந்து விடுதலை பெறலாம். கல்லீரல் தானம் பெறுபவர் மரண வாயிலிருந்து திரும்பலாம்.
இவ்வாறு ஒரு உறுப்பு தானம் பல குடும்பங்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. மதுரை நாராயணபுரத்தைச் சேர்ந்த நிதீஷ் என்ற இளைஞர் ஒருவர் மூளைச் சாவு அடைந்த நிலையில் தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்து 7 பேருக்கு புது வாழ்வு அளித்த நிகழ்வு, மனிதநேயத்தின் உயரிய எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்நிகழ்வு தமிழகத்தில் உறுப்புத் தானத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டிய ஒரு நெகிழ்ச்சி தருணமாக அமைந்தது.

மதுரை நகரின் நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர், சாலை விபத்தில் சிக்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினர் மிகுந்த மன வலியுடன் இருந்தபோதிலும், மனிதாபிமான அடிப்படையில் மிகப் பெரிய முடிவை எடுத்தனர். தங்கள் அன்புக்குரியவரின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய ஒப்புக்கொண்டனர்.
இதையும் படிங்க: அலங்காநல்லூரில் சீறப்போகும் காளைகள்! தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! முன்னேற்பாடுகள் தீவிரம்!
இதன்மூலம் அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் போன்ற முக்கிய உறுப்புகள் பிரித்தெடுக்கப்பட்டன. இளைஞர் விபத்தில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தபோதிலும் உடல் உறுப்புகள் மூலம் 7 பேருக்கு வாழ்வளித்துள்ளார். அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கருவிழிகள், தோல் போன்றவை வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இதையும் படிங்க: டிஜிட்டல் மயமாகும் வாடிவாசல்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்முறை LED ஸ்கோர்போர்டு அறிமுகம்!