பாட்ஷா படத்தில் ரஜினியுடன் இருக்கும் நாய் எதற்கு உள்ளது என தெரியாமல் இருப்பது போல, தமிழ்நாட்டில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி எதற்கு கூட்டணியில் உள்ளது என தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியை நாயுடன் ஒப்பிட்டு நடிகை விந்தியா பேசியதால் சர்ச்சை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம் சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா திறந்த வேனில் நின்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கருணாநிதி பெயரில் பூங்காக்கள் கட்டுவதற்கு பதிலாக கழிப்பறைகளை கட்டி இருந்தால் விளாத்திகுளம் மாணவி பலி ஆகி இருக்க மாட்டார் என தெரிவித்தார். ஆனால் இதெல்லாம் கட்ட முடியாது.
ஸ்டாலின் கையில் 10000 ரூபாய் மட்டுமே உள்ளது என கணக்கு கொடுத்துள்ளதாகவும், ஸ்டாலின் பெயரில் ஒரு கார் கூட இல்லை, 1 கிராம் தங்கம் கூட கிடையாதாம் எனவும், இவர் ஏழை ஸ்டாலின் எனவும், ஆனால் அவரது பேரன் பல நூறு கோடி செலவு செய்து ரஜினி, கமல் ஆகியோரை வைத்து படம் தயாரிக்கிறார் எனவும், மக்களை மட்டுமல்ல, தேர்தல் ஆணையத்தை கூட முட்டாள் என நினைக்கிறார்கள் என சாடினார்.
இதையும் படிங்க: இந்த முறை இரட்டை இலை தான்..! ஆயிரம் விளக்கு தொகுதியில் வளர்மதி வாக்குச் சேகரிப்பு..!
பல சம்பவங்கள் நடந்திடும் போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது உயிரோடு இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என மக்கள் நினைத்து பார்ப்பதாக கூறினார். மக்களை சந்திக்க தைரியம் இல்லாமல் காமெடி கூட்டம் சேர்த்துள்ளதாகவும், பாண்டிச்சேரியில் திமுக காங்கிரஸ் கூட்டணி என்பது விசு படம் போல குழப்பமாக உள்ளதாகவும், தமிழ்நாட்டில் கூட்டணி தள்ளாடுவதாக சாடினார்.
பாட்ஷா படத்தில் ரஜினியுடன் இருக்கும் நாய் எதற்கு உள்ளது என தெரியாமல் இருப்பது போல, தமிழ்நாட்டில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி எதற்கு கூட்டணியில் உள்ளது என தெரியவில்லை என்றார். காங்கிரஸ் கட்சி காலாவதியாகி 50 ஆண்டுகள் ஆனதாக சாடினார். காங்கிரஸ் கட்சியை நாயுடன் ஒப்பிட்டு நடிகை விந்தியா பேசியதால் சர்ச்சை எழுந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பது கொத்தடிமைகள் கட்சி எனவும், பூங்காக்களில் உள்ள பொம்மை போல இருப்பதாக விமர்சித்தார்.
திருமாவளவன் முரட்டு பீஸ் என்றால், கமலஹாசன் ஒரு முத்தி போன பீஸ் என விமர்சித்தார். பச்சிளம் குழந்தை வன்கொடுமை உட்பட தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சினைகளை பற்றி கேட்க கமலுக்கு துப்பில்லை எனவும், ஆனால் ஈரான் போரை நிறுத்த கூறி டிரம்பிற்கு கடிதம் எழுகிறார் என விமர்சித்தார். முன்பெல்லாம் தெரு முனையில் உண்டியல் வைத்து கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்ததாகவும், ஆனால் இப்போது தெருவில் உண்டியல் வைத்தால் அதனை சேகர்பாபு கொண்டு சென்று விடுவார் என விமர்சித்தார். கம்யூனிஸ்ட் கட்சியை திமுகவிடம் அடகு வைத்துள்ளனர் எனவும், மதிமுக என்றால், மானம் கெட்ட திமுக எனவும், வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி ஆரம்பித்தவர், தனது வாரிசுக்கு சீட் கேட்டு ஸ்டாலினிடம் கை ஏந்தி நின்றதாக சாடினார். குழந்தைகள் சாக்கலேட் கேட்பதை போல ஒரு சீட் கொடுங்கள் என இஸ்லாமியர்கள் மண்டியிட்டு இருப்பதாக கூறினார்.
தேமுதிக என்றால் தேய்ந்து முடிந்த திக எனவும், மண்டபம் இடித்ததால் கட்சி ஆரம்பித்தவர் விஜயகாந்த் எனவும், தம்பிக்கு ராஜ்ய சபா சீட்டு கேட்டு ஸ்டாலினை அண்ணா என்கிறார் பிரேமலதா எனவும், 10 பைசாவிற்கு தேறாத அரை பர்சன்ட் வாக்குவங்கி வைத்துள்ள தேமுதிக குறித்து ஸ்டாலின் விரைவில் தெரிந்து கொள்வார் என்றார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் நீடிப்பதற்கு ஒரே காரணம் தமிழ்நாட்டு பெண்கள் போட்ட பிச்சை தான் காரணம் என்றார். ஆனால் பெண்கள் சுதந்திரமாக வெளியே நடமாட முடியாத நிலை உள்ளதாக சாடினார்.தனது தந்தை பெயரில் பூங்கா கட்டும் ஸ்டாலின் எவ்வளவோ திட்டங்களை செய்ததாக கூறுவதாக சாடினார். வீட்டிற்கு வரும் திருடனை கூட நம்பலாம், ஆனால் திமுககாரனை நம்ப கூடாது எனவும், திமுகவிற்கு ஓட்டு போடுவதும், குரங்கிற்கு கோட் போடுவதும் ஒன்று எனவும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: ஆசிர்வாதம் பண்ணுங்க அண்னே..! - திமுக வேட்பாளரின் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்... பரபரப்பான அரசியல் களம்...!