கரூர் சம்பவத்தை மையப்படுத்தி திமுக அரசு மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆதவ் அர்ஜுனா தனது பேச்சில், “கரூர் விவகாரத்தில் தவெகவிற்கு ஒரு தனிப்பட்ட கணக்கு வழக்கு உள்ளது. அந்தக் கணக்கை முழுமையாகத் தீர்க்காமல் தவெக ஒருபோதும் விடாது” என்று வலியுறுத்தினார். கரூர் சம்பவத்தில் காவல்துறையை ஏவிவிட்டு திட்டமிட்டு தவெக மக்களை கொன்று குவித்ததாகவும், இது திமுகவின் சதி என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
“கரூரில் காவல்துறையினரை வைத்து எங்கள் மக்களை கொன்று குவித்தார்கள்” என அவர் கூறிய வார்த்தைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. மேலும், கரூர் கூட்ட நெரிசல் தற்செயலானது அல்ல என்று சுட்டிக்காட்டிய அவர், திமுக அரசு காவல்துறையை தவறாகப் பயன்படுத்தி வேண்டுமென்றே இத்தகைய சதியை நடத்தியதாகக் கூறினார். தவெக தலைவர் விஜய் கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு செல்லும் போது இதுபோன்ற கூட்ட நெரிசல்களை உருவாக்கி சதி செய்ய திமுக திட்டமிட்டதாகவும், அதனால்தான் விஜய் இறுதி நாள் பிரச்சாரங்களைத் தவிர்த்தார் என்றும் அவர் விளக்கமளித்தார்.

தேர்தலுக்கு பயப்படாத தவெக, தேவைப்பட்டால் 234 தொகுதிகளிலும் திமுகவை டெபாசிட் இழக்கச் செய்யும் என்றும் அவர் எச்சரித்தார். இதனால் கொந்தளித்த திமுக உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பொதுவெளியில் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் உள்ளிட்டோர் இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டது.
இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனாவின் கரூர் கணக்கு..! சட்டப் போருக்கு தயாராகும் திமுக..! சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு..!!
மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க அனுமதிக்கப்பட்டது. திமுகவின் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரூர் சோகத்தின் கண்ணீரை துடைக்கும் முதல்வர் விஜய்..! அரசுப்பணி..? பெரும் எதிர்பார்ப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்..!!