அதிமுகவில் பிரச்சனை ஆரம்பித்த மூன்று ஆண்டுகளாக கட்சிக்குள்ளிருந்து கொண்டு தொல்லை கொடுத்துக்கொண்டேயிருந்தால் எவ்வளவுதான் மனிதன் தாக்குப்பிடிக்க முடியும். தொடர்ந்து கட்சிக்கு நெருக்கடி கொடு த்தவர்களை மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். எவ்வளவுதான் பொறுமை காக்க முடியும்.
அதிமுக இயக்கத்தை அழிக்க நினைத்து, தலைமைக்கு சவால் விடுபவர்களோடு கூட்டு சேர்ந்து கொண்டு இயக்கத்தின் ஒற்றுமைக்காக பாடுபடுவதாக சொன்னால் யார் ஏற்றுக்கொள்வார் என செங்கோட்டையனை மறைமுகமாக விமர்சித்தார்.
கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தவறு செய்தது போல் பொய்யான வதந்தியை பரப்புவதை தட்டிக்கேட்கும் தளபதிகளாக நாம் இருக்க வேண்டுமே தவிர அதை காட்டிக்கொடுக்கும் பணியை செய்தால் தலைமை எப்படி பொறுத்துக்கொண்டிருக்கும்.
இதையும் படிங்க: முதுகில் குத்திய அதிமுக நிர்வாகிகள்... விஜயபிரபாகரன் தோல்விக்கு காரணம் இதுதான்... உண்மையை போட்டு உடைத்து கே.டி.ஆர்...!
அதிமுகவின் முக்கிய பொறுப்பாளர்களிடம் கேட்டுத்தான் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுக்கிறார். பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை எடப்பாடி பழனிச்சாமிதான் என சொல்லுமளவிற்கு எடப்பாடி பழனிச்சாமி தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
திமுக எதுவுமே செய்யாமல் பாஜக- பாஜக என்று சொல்லியே பிரச்சினைகளைத் தூண்டி, சிறுபான்மையினர் ஓட்டுக்களை வாங்குவதற்காக மக்களிடத்தில் பிரிவினையை தூண்டுகின்ற வழக்கத்தைத்தான் செய்து வருகிறது.
சிறுபான்மை மக்களுக்கு என்றும் துணையாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கக்கூடியவர். அதிமுக ஆட்சிக்காலத்தில் இஸ்லாமிய சமூகமும் , கிறிஸ்தவ சமூகமும் பாதுகாக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியை போல் சிறுபான்மை மக்களுக்கும் உதவி செய்தது யார் ? உங்களால்சொல்ல முடியுமா?
ஓசியாக சிறுபான்மையானரின் ஓட்டுக்களை ஏமாற்றி வாங்கக்கூடிய பணியைத்தான் திமுக செய்கிறது. பாஜக- பாஜக என சொல்லி சிறுபான்மையினரை பயமுறுத்தி ஓசியாக அவர்களது ஓட்டுக்களை பெற்று வருகிறது திமுக.
50- ஆண்டு காலம் சிறுபான்மையினரை ஏமாற்றி வாக்குகளை பெற்ற கட்சி திமுக.ஓட்டு அறுவடை இயந்திரமாக சிறுபான்மையினரை திமுக பயன்படுத்தி வருகிறது.
சிறுபான்மை மக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி என்றும் தோழனாக இருப்பார்.சிறுபான்மை மக்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு துணையாக என்றும் எடப்பாடி பழனிச்சாமி இருப்பார்.
எடப்பாடியார் இருக்கின்ற இடத்தில் மதவாதம் இருக்காது.மதவாதம் இருந்தால் அங்கு எடப்பாடி இருக்க மாட்டார்.இஸ்லாமிய மக்கள் எங்களது சொந்தங்கள் .அப்பு ,சித்தப்பு ,மாமா என்ற உறவுமுறைகளுடன் ஒருவருக்கொருவர் பழகியிருக்கக்கூடிய தமிழகத்தில் பிரிவினையை விதைத்து பயத்தைக் காட்டி சிறுபான்மையினர் ஓட்டுக்களை திமுக இன்னும் களவாடிக் கொண்டேயிருக்கிறது. ஆகவே சிறுபான்மையின மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.
யார் நமக்கு பாதுகாவலர் என்பதுடன் அதிமுக தான் நமக்கு பாதுகாவலர்கள் என சிறுபான்மை மக்களாகிய நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் டெல்லியை பற்றிக் கவலை கொள்ள வேண்டாம், தமிழகத்தின் தலைவர் எடப்பாடியார் தான். தமிழகத்தின் முதல்வராக வரக்கூடியவர் எடப்பாடியார்தான், எடப்பாடி பழனிச்சாமியை மீறி ஒரு கஷ்டமும், ஒரு நஷ்டமும் யாருக்கும் வராது.
அனைத்து சமுதாய மக்களும் அதிமுகவை ஆதரியுங்கள் உங்களுக்கு துணையாக என்றும் நாங்கள் இருப்போம்.நம்பியவர்களை நட்டாற்றில் விடும் வேலையை அதிமுக ஒருபோதும் செய்யாது என்றார்.
இதையும் படிங்க: அதிமுக நிர்வாகி மனைவி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... அம்பலமான காதல் லீலைகள்...!