சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியில் வசிப்பவர் பலராம், நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் அதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளராகயி இருந்து வரும் நிலையில், நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியின் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், சிவகாசி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராகவும் இருந்தார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் கீர்த்தனா( நாயக்கர் சமூகம்) வெற்றி பெற்றார். இந்நிலையில் அதிமுக பிரமுகர் பலராமின் செல்போனில் தொடர்பு கொண்ட நபர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தோல்விக்கு பலராம் சார்ந்த சமுதாயத்தினரே காரணம்மென மிரட்டல் விடுத்துப் பேசியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து எம். புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மற்றும் திருத்தங்கல் பகுதியில் வசிக்கும் மாரீஸ்வரன் ஆகியோர் கொண்ட மர்ம கும்ப கும்பல் பலராம் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்கியதுடன், காரையும், கார் கண்ணாடியையும் கல்லால் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மற்றும் பலராமிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்த பின்பாக அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக..! பேரிழப்பு..! பெரும் சறுக்கல்..!!
இச்சம்பவம் குறித்த தகவலின் பெயரில் அதே சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்களும், அரசியல் கட்சியினரும் சிவகாசி வட்டார துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு த்திரண்டு வந்து துணைக் கண்காணிப்பாளர் அனில் குமாரிடம் புகார் மனுக் கொடுத்தனர். புகா ரினைப் பெற்றுக் கொண்ட போலீசார் பல்ராம் வீட்டில்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பிற்கான ஏற்பாட்டைச் செய்தது, அவரது வீட்டின் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவிக் கேமராக்களை ஆய்வு செய்து விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படு மென்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஒரே குடும்பத்தில் மூவர் வெற்றி! தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தலில் மார்ட்டின் குடும்பத்தினர் சாதனை!