அதிமுக மாநில அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயக்குமார் நாகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜல்லிக்கட்டு தமிழரின் பெருமை சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேச்சு கண்டனத்திற்குரியது. சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தற்குறி கூட்டத்தில் சேர்ந்துள்ளதால், இப்படி பேசி வருகிறார்.
மதுரை மாவட்ட வளர்ச்சிக்காக ஏதாவது செய்து இருந்தால் நான் கட்சியை விட்டு விலகுகிறேன். தற்போது திடீரென வந்து அவதார புருஷன் மாதிரி பேசுவது கண்டனத்திற்கு உரியது.
அதிமுகவை அழித்துவிடுவேன் என்று யார் பேசினாலும் முடியாது
ஒரே கட்சி ஒரே கொள்கை அவர் 5 கட்சிகளுக்கு சென்றார் என்று நிர்மல் குமார் விளக்க வேண்டும் அப்போது அதற்கு பதில் சொல்கிறேன்..
இதையும் படிங்க: அரசு கல்லூரி மாணவர்கள் போராட தடை... சி.எம்.விஜயை கை காட்டிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்...!
அதிமுகவில் நான் சாமானிய தொண்டன், தவேகவிற்கு அவர் கொள்கைக்காக சென்றாரா? அல்லது விபத்தில் சென்றாரா? இந்த நூறுநாளில் நிர்மல் மாமியார் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்.
வைகை நதிகைகளை காப்பாற்ற நான் அமைச்சராக இருந்தபோது பல திட்டங்களை செய்து உள்ளேன், 40 ஆண்டுகளுக்கு குடிநீர் பஞ்சத்தை தீர்க்க திட்டம் கொண்டு வந்துள்ளேன், எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரை மண்ணுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளேன்.
அதேபோல அமைச்சர் நிர்மல் குமார் என்ன செய்துள்ளார் என்பதை விளக்க வேண்டும், அமைச்சர் நிர்மல் குமார் மதுரையில் வலம்வரும், சுற்றுசாலை, பறக்கும் சாலையை அமைக்க யார் காரணம் என்று தெரியுமா?
நிர்மல் குமார் சென்னைவாசி என்பதால் மதுரையில் நிலைமை அவருக்கு தெரியாது. நிர்மல் குமார் வாய்க்கு வந்ததை அதிகாரம் இருக்கிறது என்பதால் பேசி வருகிறார்.
அதிமுகவில் பல சோதனைகளை செய்து வந்துள்ளேன் அதனால் தற்போது என்மீது அபாண்டமாக குற்றச்சாட்டை நிர்மல் குமார் சொல்லி. அறிகிறார். ஆதாரத்தோடு நிரூபித்தால் அதிமுகவில் இருந்து விளக்குகிறேன்.
சட்டமன்றம் சந்தை மந்திரமாக மாறக்காரணம் நிர்மல் குமார் மட்டுமே. தடையில்லா மின்சாரம், விவசாயிகளுக்கு முன்னை மின்சாரம் கிடைக்கிறதா? அதனை பற்றி சட்டமன்றத்தில் பேசி உள்ளாரா?
அதிமுகவை அளிக்க ஓராயிரம் விஜய் ஓராயிரம் நிர்மல் குமார் வந்தாலும் ஒன்று செய்ய முடியாது. எங்களிடம் கண்டேன்ட் கிரியேட்டர்ஸ், narrative செட் செய்ய முடியாது. எங்களிடம் உண்மையான உழைப்பு உள்ளது.
பருவமழை போல ஆண்டுக்கு ஒரு கட்சிக்கு போவது நாங்கள் கிடையாது. வாழ்ந்தாலும் செத்தாலும் ஒரே கட்சிதான். நிர்மல் குமார் நாவடக்கத்துடன் பேச வேண்டும். நிர்மல் குமார் வாய்க்கு வந்ததை பேசுவதை மக்கள் பார்த்துகொண்டு இருக்கிறார்கள். மக்களுக்காக நாங்கள் பாடுபடுகிறோம்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் தான் எங்கள் பலம்.! ஒவ்வொரு வாக்கும் அவருக்காகவே..! நிர்மல் குமார் பெருமிதம்.!!