தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கிய நிலையில், தவெக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை அன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் மரிய வில்சன் அவர்கள் 2026-27 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை சமர்ப்பித்தார். அதையொட்டி இன்று ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் அமைச்சர் வினோத் இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வைக்கிறார்.
இது தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் என்பதால் விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.நேற்றைய பொது பட்ஜெட்டில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு சுமார் 14,984 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான மின்சார மானியத்திற்கு 7,432 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெறப்பட்ட பயிர்கடன்களில் 75,000 ரூபாய் வரை உள்ளவர்களுக்கு முழு தள்ளுபடி அளிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்காக சுமார் 5,932 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 14.43 லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் பொது பட்ஜெட்டிலேயே இடம்பெற்றாலும், இன்றைய வேளாண் பட்ஜெட்டில் கூடுதல் நடவடிக்கைகள், புதிய திட்டங்கள் மற்றும் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்த விரிவான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இன்னைக்கு சம்பவம் உறுதி... சட்டப்பேரவைக்குள் மாஸ்டர் பிளானுடன் என்ட்ரி கொடுத்த திமுக... ஷாக்கில் தவெக...!
தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முழு பயிர்கடன் தள்ளுபடி, பெரிய விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி, நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 3,500 ரூபாயாக உயர்த்துதல், கரும்புக்கு டன் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வரை அதிகரிப்பு போன்றவை இடம்பெற்றிருந்தன. இவற்றில் சில ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றைய பட்ஜெட்டில் மேலும் விரிவான அறிவிப்புகள் வருமா என்பது விவசாயிகளின் முக்கிய கவனமாக உள்ளது.
குத்தகை விவசாயிகளுக்கு உதவித்தொகை, உழவர் உரிமை அட்டை, நீர்வள மேம்பாடு, பயிர் காப்பீடு விரிவாக்கம், இயந்திரமயமாக்கல் ஊக்குவிப்பு போன்ற அம்சங்களும் கவனம் பெறும் என கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: "வாழ்த்துங்க முதல்வரே... தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்.. CM விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் வினோத்..!!