சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்று உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிரேத பரிசோதனை அறிக்கை படிக்க படிக்க மனம் பதறுவதாக தெரிவித்தனர்.

காவலர்கள் கைது செய்யப்பட்டது கண்டுடைப்பு என்று காட்டமாக பேசிய நீதிபதிகள், கொடூர சம்பவமாக இருக்கிறது என்றும் வேதனை தெரிவித்தனர். இது சாதாரண கொலைகள்ள அடித்தே கொலை செய்துள்ளார்கள் என்றும் அஜித் குமாரின் உடம்பில் காயம் இல்லாத இடமே இல்லை என்றும் கூறியுள்ளனர். அஜித் குமார் உடலில் 44 காயங்கள் இருப்பதாகவும் ஒரு மாநிலம் தனது குடிமகனையை கொலை செய்துள்ளதாக அதிருப்தி தெரிவித்தனர். இவ்வளவு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் எதை வைத்து அடித்தார்கள் என்றும் அஜித் குமாரை அடித்து இடத்தில் ரத்தக்கறைகள், சிறுநீர் தடயங்களை சேகரித்தீர்களா என்றும் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு சீல்.. கூட்டு களவானிகளா இருக்காதீங்க.. அதிகாரிகளுக்கு வார்னிங்!

அஜித் குமார் தாக்குதல் தொடர்பாக வீடியோ எடுத்த நபரிடமும் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன் வைத்து சாட்சியங்களை பதிவு செய்தனர். காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள் வருங்காலங்களில் காவல்துறையினர் இதுபோல நடந்து கொள்ளக் கூடாது என்றும் கல்வி அறிவு அதிகம் உள்ள தமிழ்நாட்டின் இது போன்ற நடப்பது ஆபத்தானது எனவும் கூறினர். எதிர் தரப்பினர் இதனை அரசியலாக நினைப்பதாக அதிமுகவை சுட்டிக்காட்டி அரசு தரப்பில் வாதிடப்பட்ட போது நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதை தானே செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

அஜித்தின் பிறப்புறுப்பிலும் வாய் காதுகளிலும் மிளகாய் பொடி போடப்பட்டுள்ளது என நீதிபதிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். அஜித்தின் தாயார் அளித்த புகார் மீது இதுவரை வழக்கு பதியப்படவில்லை என்று கூறிய நீதிபதிகள், நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர்களை தரப்புக்கு 50 லட்சம் ரூபாய் தருவதாக சிலர் பேரம் பேசி இருப்பதாகவும் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும், மூன்று திமுக நிர்வாகிகள் டிஎஸ்பி உடன் சேர்ந்து திருமண மண்டபத்தில் வைத்து பேசியதாகவும், அஜித் குமாரின் தம்பிக்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும் பேரம் பேசி இருப்பதாகவும் கூறினர். ஜெயராஜ் - பெனிக்ஸ் சாத்தான்குளத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மறக்கவே முடியாது என்று தெரிவித்தனர்.

வழக்கை சிபிஐ க்கு மாற்ற ஆட்சேபம் இல்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்ட நிலையில், வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் தெரிவித்தனர். 28ஆம் தேதி மாலை வரை எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படவில்லை என்று கூறிய நீதிபதிகள், சிபிசிஐடி யின் சிறப்பு குழுவால் நியாயமான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என்று தெரிவித்தனர். கொலை செய்பவர் கூட இப்படி தாக்க மாட்டார் என்றும் கொடூரமான சம்பவம் தினமும் கூறினர். மேலும், மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இந்த வழக்கு விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதி விசாரணை என்றாலே நீதி விசாரணை என்றே அழைக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வடக்கு விசாரணையை எட்டாம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கொலை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இதையும் படிங்க: பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்: நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு..!