ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினோட உடல்நிலை பத்தி உலகமே பேசிக்கிட்டு இருக்கு. இப்போ புதுசா ஒரு பரபரப்பான செய்தி வெளியாகியிருக்கு – புடினோட பாதுகாப்பு அதிகாரிகள் அவரோட உடல் கழிவுகளை, அதாவது மலம், சிறுநீரை ஒரு சூட்கேஸ்ல சேகரிச்சு ரஷ்யாவுக்கு எடுத்துட்டு போறாங்களாம்! இது அவரோட பாதுகாப்பு நடைமுறையோட ஒரு பகுதியாம்.
இந்த தகவல், ஆகஸ்ட் 15-ம் தேதி அலாஸ்காவுல அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை புடின் சந்திச்சப்போ வெளியாகியிருக்கு. இது மட்டுமில்ல, 2017-ல பிரான்ஸ், 2019-ல சவுதி அரேபியா பயணங்களின்போதும் இதே மாதிரி நடந்திருக்காம்னு சொல்றாங்க. இதெல்லாம் கேட்டு உலகமே அதிர்ச்சியில இருக்கு!
72 வயசு ஆன புடினோட உடல்நிலை பத்தி பல வருஷமா பலவிதமான பேச்சுகள் உலக ஊடகங்கள்ல அடிபடுது. சிலர் “புடினுக்கு புற்றுநோய் இருக்கு”னு சொல்றாங்க, இன்னும் சிலர் “பார்கின்சன் நோய் இருக்கலாம்”னு பேசுறாங்க. அவரோட முகம் வீங்கியிருக்கு, கை கால் நடுக்கம், நடையில தடுமாற்றம்னு பல அறிகுறிகளை வச்சு இந்த வதந்திகள் பரவுது.
இதையும் படிங்க: புதின் - ட்ரம்ப் இடையிலான சந்திப்பு!! நாளை முடிவுக்கு வருகிறதா ரஷ்யா - உக்ரைன் போர்!
ஆனா, கிரெம்ளின் மாளிகை இதையெல்லாம் “பொய், வதந்தி”னு திட்டவட்டமா மறுத்துட்டு வருது. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “புடின் நல்ல ஆரோக்கியத்தோட இருக்கார், இது எல்லாம் வெறும் புரளி”னு சொல்லியிருக்கார். ஆனாலும், இந்த புது சூட்கேஸ் விவகாரம் இந்த விவாதத்துக்கு மேலும் தீனி போட்டிருக்கு.

இந்த சூட்கேஸ் ஏற்பாடு ஏன்? புடினுக்கு பயம், வெளிநாட்டு உளவு துறைகள் அவரோட மலம், சிறுநீரை ஆய்வு செய்து உடல்நிலை பத்தி தெரிஞ்சுக்குவாங்கனு. இதனால, அவரோட உடல் கழிவுகளை ஒரு பிரத்யேக பையில சேகரிச்சு, சூட்கேஸ்ல வச்சு ரஷ்யாவுக்கு எடுத்துட்டு போறாங்களாம். இது புடினோட பயணங்களின்போது வழக்கமான நடைமுறையாம்.
பிரான்ஸ் பத்திரிகையான பாரிஸ் மேட்ச் இதைப் பத்தி 2017, 2019 பயணங்களின்போது எழுதியிருக்கு. இதோட, ரஷ்யாவோட ப்ரோஜெக்ட் என்ற செய்தி நிறுவனம், புடின் சோச்சி ரிசார்ட்டுக்கு போகும்போது புற்றுநோய் நிபுணர்கள் அவரைப் பார்க்க அடிக்கடி வந்ததாக ஒரு விசாரணை அறிக்கையை வெளியிட்டிருக்கு. இதெல்லாம் புடினோட உடல்நிலை மர்மத்தை இன்னும் ஆழமாக்குது.
இன்னொரு விசித்திரமான விஷயம், புடின் மான் கொம்பு ரத்தத்துல குளிக்குறார்னு ஒரு பேச்சு. இது அவரோட ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்னு சைபீரியாவைச் சேர்ந்த புடினோட நண்பரும் பாதுகாப்பு அமைச்சருமான செர்ஜி ஷோய்கு சொன்னாராம்னு பேச்சு இருக்கு. ஆனா, இதுக்கு மருத்துவ ரீதியான ஆதாரம் இல்லைனு டாக்டர்கள் சொல்றாங்க.
இதோட, புடின் உடல் நலமில்லாம இருக்குறதை மறைக்க அவரோட பதிலி (body double) ஒருத்தரை பயன்படுத்துறாங்கனு வதந்தி இருக்கு. இந்த வதந்திகளுக்கு கிரெம்ளின் “அபத்தமான பொய்”னு மறுத்தாலும், உலக ஊடகங்கள் இதை விடாம பேசிட்டு இருக்காங்க. புடினோட உடல்நிலை பத்தி உலகத்துக்கு தெரியாத மர்மமா இருக்கு. ஆனா, இந்த சூட்கேஸ் விவகாரம், அவரோட பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வளவு தீவிரமானவைனு காட்டுது.
இதையும் படிங்க: அமெரிக்கா ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி.. புதின் - மோடி சந்திப்பு.. ட்ரம்புக்கு சிக்கல்..