அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்த வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றபோது, வழிகாட்டு விதிகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. விதிகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் ரோடு நடத்த அனுமதி தரப்படாது என்ற உத்தரவு அடிப்படை உரிமையை பறிப்பது ஆகாதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
தமிழ்நாடு அரசு முடிவு அரசியல் கட்சிகளின் அடிப்படை உரிமைகளை பறிப்பது போல் ஆகாதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது எந்த கட்சியும் பொதுக்கூட்டம் நடத்துவதில் இருந்து தடுக்கப்படவில்லை எனவும் தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது அனைத்து கட்சிகளுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார். விதிகள் வகுக்கும் வரை பரப்புரைக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த எந்த தடையும் இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்தது. மேலும், உரிய கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களிடம் ஆலோசித்து தான் விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

காவல், , மாநகராட்சி, தீயணைப்பு, மருத்துவத்துறையை உள்ளடக்கியவரை ஆலோசித்து விதிகளை வகுக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பத்து நாட்களில் விதிகளை வகுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசின் கோரிக்கையை ஏற்று அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம் நவம்பர் 11ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. 
இதையும் படிங்க: பிளான் பக்காவா இருக்கணும்… தவெகவுக்கு வழிகாட்ட Ex. ஐஜி தலைமையில் குழு அமைப்பு..!
இதனிடையே, பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகை பத்தாவது தளத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் ஆறாம் தேதி காலை 10:30 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அரசு ஆலோசனை நடைபெறும் என்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
இதையும் படிங்க: அதிரடி காட்டும் சிபிஐ... வேலுச்சாமிபுரம் வணிகர்களிடம் தீவிர விசாரணை...!