தமிழ்நாட்டின் கல்வி முறையில், மாணவர்களின் திறமைகளை அடையாளம் காண்பதற்கும் அவற்றை ஊக்குவிப்பதற்கும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கிய இடத்தைப் பெற்றிருப்பது முதலமைச்சர் திறனறிவு தேர்வு என்று அழைக்கப்படும் இத்தேர்வு மாணவர்களின் ஆழமான கல்வி அறிவைத் தாண்டி, அவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்த உதவுகிறது, மேலும் அது அரசின் கல்வி கொள்கையின் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகிறது.
இத்தேர்வின் தோற்றம் 2023-2024 கல்வியாண்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை கீழ் செயல்படும் அரசு தேர்வுகள் இயக்ககம் இத்தேர்வை நடத்தி வருகிறது. இதன் முதன்மை நோக்கம், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் உள்ள மறைமுகமான திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு நிதி ஊக்கம் வழங்கி உயர்கல்வியைத் தொடர ஊக்குவிப்பதாகும்.

இதனிடையே, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மாணவர்கள் எல்லாவிதமான போட்டி தேர்வுகளுக்கும் தயாராகும் வகையில் கையேடு வழங்கப்படும் என தெரிவித்தார். இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு முழுவதும் இருந்து 54 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் முழு உழைப்பையும் கொண்டு கையேடு உருவாக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்காதீங்க... மா. சு. எச்சரிக்கை...!
ஏற்கெனவே உருவாக்கப்பட்ட NMMS கையேடுகள் மூலமாக 20 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், நன்கு அறிந்து தேர்ந்த ஆசிரியர்கள் மூலமாக உருவாக்கப்படுவதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த முதல் அமைச்சர் திறனறிவு தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் வதந்தி... யூடியூபர் மாரிதாஸ் அதிரடி கைது... வேட்டையை தொடரும் போலீஸ்...!