ஆகஸ்ட் 9ஆம் தேதி பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அன்புமணி அறிவிப்பை வெளியிட்டடிருக்கிறார். ஏற்கனவே ஆகஸ்ட் 17ஆம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டமானது நடைபெறும் என்று ராமதாஸ் அறிவித்திருக்கக்கூடிய நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி பாமகாவினுடைய பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணி அறிவித்திருக்கிறார்.
வரும் 9ஆம் தேதி பாமக பொதுக்குழு கூட்டமானது மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதாக பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் மற்றும் பாமக தலைவர் அன்புணி ராமதாஸ் ஆகியோர் வந்து கூட்டாக அறிவித்துள்ளனர். குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையேயான மோதலானது தொடர்ந்து நீடித்து வரக்கூடிய நிலையில் அடுத்த கட்டமாக பாமக மாநில சிறப்பு பொதுக்குழுவானது ஆகஸ்ட் 17 ஆம் தேதி திண்டிவனத்தில் நடைபெற உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பிலிருந்து அறிவிப்பானது வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது அதற்கு முன்பாகவே அதாவது ஆகஸ்ட் 9 ஆம் தேதி பாமக தலைவர் அன்புமணி தரப்பில் மாநில பொதுக்குழுவானது கூட்டப்பட உள்ளதாக பாமக அன்புமணி தரப்பு பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குறிப்பாக தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெறுவதற்கு பாமக பொதுக்குழு ஆனது கூட்டி, அக்கட்சி பொதுக்குழு உறுப்பினர்களின் தேர்வின் அடிப்படையிலேயே பாமக தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட நியமனங்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் இணைகிறதா பாமக? - சற்றும் யோசிக்காமல் ராமதாஸ் சொன்ன பதில்..!
அதனைத் தொடர்ந்து தற்போது தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெறும் வகையில் யார் முன்னதாக பொதுக்குழுவை கூட்டுவது யார் முன்னதாக பொதுக்குழுவை கூட்டி தலைவர் உள்ளிட்டோரைம்வந்து தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் வந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முன்பாகவே ஆகஸ்ட் 9-ஆம் தேதி பொதுக்குழுவை வந்து கூட்ட உள்ளார்.
அதன் பிறகு 17 ஆம் தேதி திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பிலும் பொதுக்குழுவானது கூட்டப்பட உள்ளது. குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழுவை கூட்ட உள்ளது பாமகவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென போன் போட்ட ராமதாஸ்... தமிழக அரசியலில் பரபரப்பு...!