ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். அந்த நேரங்களில் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி கொடுக்கப்படும். இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது அனைவருக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்படுவது பழக்கம். ஒவ்வொரு ஆண்டும் நோன்பு கஞ்சிக்காக பள்ளி வாசல்களுக்கு தமிழக அரசின் சார்பில் பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகை நெருங்கி வரும் இந்த நேரத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்குவது தொடர்பாக முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரித்து வழங்கும் பழக்கம் பள்ளிவாசல்களில் நீண்டகாலமாக இருந்து வரும் சூழலில், இதற்காக பச்சரிசி தேவைப்படும் நிலையில், தமிழக அரசு பல ஆண்டுகளாகவே இந்த உதவியைச் செய்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான ரம்ஜான் நோன்பு தொடங்க உள்ளது. இந்த நிலையில் பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். 8,700 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் என்ன தெரிவித்துள்ளார். இதன்மூலம் அரசுக்கு ரூ.20.88 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்னும் எவ்வளவு டைம் ஆகும்?! அதிமுக, இரட்டை இலை வழக்கு! தேர்தல் ஆணையம் பதிலளிக்க டில்லி ஐகோர்ட் உத்தரவு!
தெற்காசிய நாடுகளில் ரம்ஜான் மாதம் பிப்ரவரி 19 அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் பிப்ரவரி 18-ஐ தொடக்கமாகக் கொண்டாலும், இந்தியாவில் பிறை தென்படும் நிலையைப் பொறுத்து பிப்ரவரி 19 அல்லது அதற்கு அடுத்த நாள் முதல் நோன்பு தொடங்க வாய்ப்பு அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2026 தேர்தல் களம்: விருப்பமனு அளித்தவர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் நேர்காணல்!