பள்ளி மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்வது, நாற்காலிகளை தூப்பது போன்ற வேலைகளை ஈடுபடுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. முன்னதாக, குமாரபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பட்டியலின மாணவிகளை கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல், ஈரோடு மாவட்டம் முள்ளம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவர்களை கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்ததாக வீடியோ வெளியானது.
இதுபோல பள்ளி கழிவறைகளை மாணவர்களை வைத்து சுத்தம் செய்வதற்கு பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் ஊராட்சி, நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவ மாணவியர்களை வைத்து, கழிவறை சுத்தம் செய்ய வைத்த காணொளி மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழகப் பள்ளிகள் ஏற்கனவே, வகுப்பறைக் கட்டிடம் இல்லாமல், சுத்தமான குடிநீர் வசதி இல்லாமல், போதிய ஆசிரியர்கள் இல்லாமல் அவலநிலையில் உள்ளபோது, பத்து வயதுக்கும் குறைவான தொடக்கப்பள்ளி மாணவர்களைக் கழிவறை சுத்தம் செய்ய வைத்திருப்பது, பள்ளிக்கல்வித்துறை எத்தனை சீரழிந்து கிடக்கிறது என்பதைக் காட்டுவதாக குற்றம் சாட்டினார்.
இன்னும் ரசிகர் மன்ற மனப்பான்மையில் இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், கடந்த நான்கு ஆண்டுகளாக கல்வித்துறைக்குச் செய்தது, முதலமைச்சருடன் இணைந்து, விளம்பர நாடகங்களில் நடித்தது மட்டும்தான் என்று அண்ணாமலை சாடினார். பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது சட்டப்படி குற்றம் என்பதாவது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு தெரியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: கன்னடத்து பைங்கிளி.. சரோஜா தேவி மறைவு பேரிழப்பு! இபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல்..!
இதையும் படிங்க: மைக் வைச்சுட்டு சும்மா 4 ரீல்ஸ் போட்டா தலைவனா நீ ?அண்ணாமலை அட்டாக்...