பாஜகவின் முன்னாள் தமிழக மாநிலத் தலைவரான அண்ணாமலை 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியால் நியமிக்கப்பட்ட சில தேர்தல் பொறுப்புகளிலிருந்து திடீரென விலகியுள்ளார். இந்த முடிவு இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலைக்கு பாஜக தலைமை சிங்காநல்லூர் (கோவை), விருகம்பாக்கம் (சென்னை), மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளராக நியமித்திருந்தது. இந்தத் தொகுதிகள் பாஜகவின் முன்னுரிமை பட்டியலில் இருந்தவை. தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி கள அமைப்புகளை வலுப்படுத்தும் நேரத்தில் இந்த விலகல் அறிவிப்பு வந்துள்ளது.

அண்ணாமலை தனது விலகலுக்கான காரணமாக தனது தந்தையின் உடல்நிலை சரியில்லாததை குறிப்பிட்டுள்ளார். தந்தையாரின் உடல்நலக் குறைவு காரணமாக அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை உள்ளது. அதனால் அடிக்கடி பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் விளக்கினார். இதனால் கோவையில் தங்கி இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும், இதை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்துவிட்டதாகவும் கூறி இருந்தார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!
அண்ணாமலை தானாக விலகவில்லை என்று நடிகர் S.V. சேகர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலக்கி வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார். அண்ணாமலை இருக்கும் வரை ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது என நயினாருக்கும் தெரியும் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும் எனவும் விமர்சனம் செய்துள்ளார். நயினாருடன் ஏற்பட்ட மோதல் தான் காரணம் எனவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நயினாருடன் மோதலா? கட்சி பொறுப்பில் இருந்து விலகிய அண்ணாமலை..! பாஜகவில் பரபரப்பு..!