திரையுலகினரின் வாழ்நாள் கனவு ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என்பது. அந்தவகையில் 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் 5 விருதுகளை அள்ளி சாதனை படைத்துள்ளது அனோரா என்ற திரைப்படம். பாலியல் தொழிலாளி ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட இத்திரைப்படத்தை ஷான் பேக்கர் இயக்கி இருந்தார்.

அனோரா படத்தில் நடித்ததற்காக மில்கி மேடிசன் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய விருதுகளையும் தட்டிச் சென்றது. மொத்தம் 5 விருதுகளை இப்படம் அள்ளியது. சிறந்த இயக்குநருக்கான விருதினை வென்ற பின்னர் பேசிய ஷான் பேக்கர், பாலியல் தொழிலாளிகள் சமூகத்திற்கு நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சாதிச் சான்றிதழில் மிகப்பெரிய மோசடி : உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி..!
இதேபோன்று தி ப்ரூட்டலிஸ்ட் படத்தில் நடித்த அட்ரியன் ப்ராடி சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் இந்த படம் வென்றது. விருது வென்ற படங்கள் மற்றும் பிரிவுகளின் மொத்த விவரம் இதோ...

சிறந்த திரைப்படம் - அனோரா (Anora)
சிறந்த இயக்குநர் - ஷான் பேக்கர் (Sean Baker) (திரைப்படம் அனோரா (Anora))
சிறந்த நடிகை - மைக்கி மேடிசன் (Mikey Madison) (அனோரா - Anora).
சிறந்த எடிட்டிங் - அனோரா (Anora)
சிறந்த ஒரிஜினல் திரைக்கதை - அனோரா (Anora)
சிறந்த நடிகர் - அட்ரியன் பிராடி (Adrien Brody) (திரைப்படம் - தி ப்ரூட்டலிஸ்ட் (The brutalist))
சிறந்த ஒரிஜினல் இசை - தி புரூட்டலிஸ்ட் (The brutalist)
சிறந்த ஒளிப்பதிவு - தி புரூடலிஸ்ட் (The brutalist)

சிறந்த துணை நடிகர் - கீரன் கல்கின் (The Real Pain)
சிறந்த துணை நடிகை - ஜோ சல்டானா (Emilia Perez)
சிறந்த சர்வதேச திரைப்படம் - ஐயம் ஸ்டில் ஹியர் (I'm Still Here) - பிரேசில்
சிறந்த தழுவல் திரைக்கதை - கான்க்ளேவ் (Conclave)
சிறந்த ஒலி அமைப்பு - டியூன் பார்ட் 2 (Dune: Part Two)

சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் - டியூன் பார்ட் 2 (Dune: Part Two)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஃப்ளோ (Flow)
சிறந்த அனிமேஷன் குறும்படம் - இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ் (In the Shadow of the Cypress)
சிறந்த ஆவணப்படம் - நோ அதர் லேண்ட் (No Other Land)
சிறந்த ஆவண குறும்படம் -தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா
சிறந்த ஒரிஜினல் பாடல் - எமிலியா பெரெஸின் (Emilia Perez) எல் மால் (El Mal).

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு (Production Design) - விக்கெட் (Wicked)
சிறந்த ஒப்பனை - சப்ஸ்டன்ஸ் (Substance)
சிறந்த ஆடை வடிவைப்பு - விக்டு (Wicked)
இதையும் படிங்க: 17 வயது சிறுவன் வெறியாட்டம்.. சல்லி சல்லியாக நொறுங்கிய வாகனங்கள்.. JCB-யால் இடித்து தள்ளிய சிறுவன்..