தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்த போது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி கொல்லைப்புறமாக தொகுதி மறு வரையறை மசோதாவை நிறைவேற்ற பாஜக முனைந்த போது 5 மாநில முதலமைச்சர்கள் மற்றும் தேசிய மாநில அளவிலான எதிர்க்கட்சியினரை ஒன்றிணைத்து அந்த மசோதாவை வீழ்த்தி பிரதமர் மோடிக்கு தோல்வியை பரிசாகத் கொடுத்து தமிழக உரிமையை காத்தவர் ஸ்டாலின் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
அந்த நேரத்தில் தனது எஜமான் பாஜகவு-க்கு பயந்து ஒதுங்கி ஒளிந்து, தொகுதி மறு வரையறை குறித்து எந்த கருத்தும் சொல்லாத விஜய் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்திருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என இன்றைய அனைத்துக் கட்சி கூட்டத்தை விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்த பிரதிநிதித்துவமும் இல்லாத தவெக கட்சிக்கு, ஒரு எம்.பி-க்குரிய வாய்ப்பு வந்த போது, காங்கிரஸில் இருந்து கொண்டு திமுக-வுக்கு துரோகம் செய்தவருக்கு அதை வழங்கிவிட்டு தானோ தன் கட்சி உறுப்பினர்களோ பாராளுமன்றம் சென்று பா.ஜ.க-வை சந்திக்க திராணி இல்லாத உங்கள் வீரம் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாதா CM சார் என்று தெரிவித்தார் .

காவிரி பிரச்சனை, தமிழ்த்தாய் வாழ்த்து, 100 நாள் வேலைத்திட்டம், FCRA, இந்தி -சமஸ்கிருததிற்கு ஆதரவு ஆகிய பிரச்சினைகளில் பா.ஜ.க விற்கு துணை போகும் நீங்கள், தற்போது உங்கள் ஆட்சியை தக்க வைத்து வரும் காங்கிரஸ்-க்கு துணை செல்ல எம்.பி-க்கள் கூட்டம் என்ற உங்கள்
இதையும் படிங்க: ப்ளிஸ்..!! "கோமாளி" அரசிடம் இருந்து உதயநிதியை காப்பாத்துங்க.! அப்பாவு விமர்சனம்..!!
கபட நாடகம் தமிழ்நாட்டுக்கு தெரியாதா என கேட்டுள்ளார். சிங்கம் போல் திமுகத் தலைவர் மு.க. ஸ்டாலின் ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் தமிழக உரிமையையும், தமிழக மக்களையும் எவ்வாறு பாதுகாத்தாரோ அது போல் தொகுதி மறுவரையறையிலும் முடிவெடுப்பார் என்றும் தற்போது தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சியை பார்த்தால் எனக்கு ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது., ராஜா வேஷம் போட்டாலும் கோமாளி #கோமாளி தான் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி! அப்பாவு முன்னிலை?! அப்செட்டில் அனிதா ராதாகிருஷ்ணன்! கனிமொழி-உதயநிதி முடிவு?