கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக கடும் வெயில் நிலவி வந்தது. அதே சமயத்தில் அவ்வப்போது லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது. இந்தநிலையில் தென்தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்த நிலையில், குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இந்த மழை நேற்று அதி காலை முதல் பலத்த மழையாக பெய்தது குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீர்வரத்து பகுதி மற்றும் களியல், திற்பரப்பு, குலசேகரம், பால மோர், சுருளகோடு உள்ளிட்ட இடங்களில் கன மழை நீடித்தது. மதியம் கனமழையாக வெளுத்து வாங்கியது.இந்த மழை காரணமாக அணிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.53 அடியாகவும்,77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 56.05 அடியாகவும்,18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார்-1 அணை 5.41அடியாகவும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார்-2 அணை 5.51 அடியாகவும் உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING அடித்து வெளுக்கும் கனமழை... இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!
பேச்சுப்பாறை அணைக்கு வினாடிக்கு 2574 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் அணையில் இருந்து 514 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோன்று பெருஞ்சாணி அணைக்கு 1571 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் அணையில் இருந்து 285 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில் தொடர் மழை காரணமாக இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது உள்ளது இதனால் அருவியல் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: காங்கிரஸுக்கு வந்தால் கத்துக்கொடுக்கிறோம்... எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் வகுப்பெடுத்த செல்வப்பெருந்தகை...!