நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களுக்கு தனது வீட்டில் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.
விருந்து முடிந்தபின் செய்தியாளர்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வீட்டிற்கு சாப்பிடுவதற்காக அழைத்தேன் அதன் பேரில் அவரும் வந்திருந்தார்.
அனைவரும் உணவுகளை சாப்பிட்டு விட்டு சென்று விட்டனர்.
ஓபிஎஸ் நீங்கள் சொல்வதை தொடர்ந்து மறுத்து வருகிறார் என்ற கேள்விக்கு, அதைப்பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை ஏனென்றால் அவர் வேறு இடத்திற்கு சென்று விட்டார். எங்களோடு இருந்தால் கருத்து கூறலாம். அதனால் அவர் பற்றி கருத்து சொல்ல முடியாது.
இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணியா? - மெளனம் கலைத்த ஓபிஎஸ்... வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்...!
உங்கள் வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணிகள் குறித்து பல்வேறு பேச்சு வார்த்தை நடந்ததா என்ற கேள்விக்கு, நாங்கள் எங்களுக்குள் பேச்சு வார்த்தை நடத்தினோம் என்றார். தேசிய ஜனநாயக கூட்டணி பலப்பட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, நிச்சயமாக எங்கள் கூட்டணி பலமாக அமையும் என்றார்.
மீண்டும் ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதைப் பற்றி நான் கருத்து பேச விரும்பவில்லை. 2026-ல் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். நடைபெறும் திமுக அரசு மக்கள் விரோத அரசாக இருக்கிறது. சொத்து வரி உயர்வு மின்சார கட்டண உயர்வு பாலியல் வன்கொடுமைகள் படுகொலைகள் வட மாவட்டங்களிலும் பல படுகொலைகள் நடந்து வருகிறது. இதற்குக் காரணம் போதை பொருட்கள் தான் என்று கூறினார்.
இதையும் படிங்க: என்மேல தப்பு இல்லங்க... மறுக்கும் நயினார்! ஆதாரத்தை காட்டிய ஓபிஎஸ்.