2026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு புதியத் திட்டமோ அல்லது முறையான நிதி ஒதுக்கீடோ செய்யப்படாததைக் கண்டித்து, திமுக தலைமையிலானக் கூட்டணிக் கட்சிகள் இன்று வீதியில் இறங்கிப் போராடினன. இந்தப் போராட்டத்தை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் காரசாரமானப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ வழங்கி அநீதி இழைத்தால், நாங்கள் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாட்டு மக்களின் குரலாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திரண்டு இன்று எமதுக் கூட்டணிக் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இது வெறும் போராட்டம் அல்ல; தமிழகத்தின் உரிமையை மீட்பதற்கானப் போர். தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பாசிச பாஜக அரசுக்கும், அவர்களுக்குத் துணைப்போகும் அதிமுக-விற்கும் வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்தப் பாடம் புகட்டுவார்கள். பட்ஜெட்டில் எங்களுக்கு ஜீரோ வழங்கியவர்களுக்கு, தேர்தலில் ஜீரோ வையே மக்கள் பரிசாகத் தருவார்கள்.
இதையும் படிங்க: 2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!
எந்தச் சூழலிலும் தமிழ்நாடு தலைகுனியாது! தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதியைத் தராமல் தடுக்கும் என்.டி.ஏ கூட்டணிக்கு எதிராக எமதுத் ஜனநாயகப் போர் தொடரும். தமிழ்நாடு வெல்லட்டும்; நாம் ஒன்றாக வெல்வோம்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகத் தீவிரமாகப் பதிவிட்டுள்ளார். இன்று நடைபெற்றப் போராட்டங்களில், ஜி.எஸ்.டி வரி பகிர்வில் நிலவும் அநீதி, 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி குறைப்பு, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி வழங்காதது மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்கள், ஒன்றியம் மற்றும் நகர அளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானத் தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: இது டப்பா என்ஜின் அல்ல.. சூப்பர் பாஸ்ட் என்ஜின்! விமர்சனங்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!