சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழக தேர்தல் களம் மீண்டும் ஒருமுறை சூடுபிடித்துள்ளது. “மாற்றம்” என்ற வாசகத்துடன் அரசியல் களத்தில் குதித்துள்ள தமிழக வெற்றிக் கழகம், தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவரும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் தேர்தல் என்றாலே பரிசுப் பொருட்கள், பண விநியோகம், வாக்காளர்களை நேரடியாக கவரும் உத்திகள் போன்றவை புதியவை அல்ல. பல ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்து வந்துள்ளன. ஆனால் “அந்த அரசியலை மாற்றுவோம்” என்ற உறுதியுடன் வந்த கட்சியும் அதே பாதையில் நடக்கிறது என்ற தகவல்கள் வெளியாகும் போது, அது அரசியல் நகைச்சுவையா அல்லது கவலைக்குரிய நிலையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள், இப்போது தவெகவினரின் “மிஷன்” மீது தீவிரமாக கண்காணிப்பு வைத்துள்ளன. பல இடங்களில் பரிசுப் பொருட்களுடன் பயணம் செய்ததாகக் கூறப்படும் நிர்வாகிகள், அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவங்கள் வெளியாகி வருகின்றன. வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் மின்னணு சாதனங்கள் வரை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் கரூர் விவகாரம்... ஆதாரத்துடன் விஜயை லாக் செய்த சிபிஐ... கிலியான கில்லி நாயகன்...!
நேற்று முன்தினம், நாமக்கல்லில் தவெக ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சில்வர் டப்பா பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. தற்போது, தவெக ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பூஸ்ட் பாட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. வாக்காளர்களுக்கு வழங்கதான் இவை வைக்கப்பட்டிருக்கிறதா? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வீடியோ தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: விஜய் பங்கேற்கும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..!! கட்சி தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!