தேனி மாவட்டம் போடி குரங்கணி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நாட்டு மாடுகள் மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம் . போடி மேல சொக்கநாதபுரம் கரட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நாட்டு மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் வனத்துறை சட்டம் 2006 இன் படி சமூக உரிமைகள் கால்நடை மேச்சலுக்கு பொருந்தாது என நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தொடர்ச்சியாக வனப்பகுதிகளில் நாட்டு மாடுகள் மேச்சலுக்கு வனதுறையினர் அனுமதிக்காத நிலையில் பல்வேறு பிரச்சனைகள் வனத்துறையினருக்கும் மாடு மேய்ப்பவர்களுக்கும் தொடர்ச்சியாக நடந்து வந்தது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று தடையை மீறி நாட்டு மாடுகளை மேச்சலுக்கு அனுப்பும் போராட்டத்தை நடத்தினார். கரட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளுடன் முந்தல் அருகே அடவுபாறை பகுதிக்குச் சென்ற சீமான் அங்கு வனத்துறையினரிடம் சிறிது நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் வனத்துறையினர் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்த நிலையில் அடவுபாறை வனப்பகுதிக்கு செல்லும் பகுதியில் வைக்கப்பட்ட பேரிகடுகளை தூக்கி எறிந்து தடையை மீறி சீமான் வனப்பகுதிகளுக்கு சென்று நாட்டு மாடுகளை மேச்சலுக்கு அனுப்பினார். இதனிடையே நாம் தமிழர் கட்சியினர் நாட்டு மாடு மேய்க்கும் நபர்கள் மற்றும் வனத்துறையினர் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கையில் கம்புடன் தடையை மீறிச் சென்று மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 57 பேர் மீது வன உயிரின விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: செல்லும் திசையெல்லாம் இசையால் வெல்லும் தமிழன்! ஜி.வி.க்கு சீமான் அன்பு வாழ்த்து
இதையும் படிங்க: தடையை மீறிய சீமான்... வனப்பகுதிக்குள் நுழைந்த நாம் தமிழர் கட்சியினர்! திக்குமுக்காடிய வனத்துறை