பழனி பத்திரபதிவு அலுவலகத்தில் சோதனைகள் ஈடுபட்ட சிபிசிஐடி- ஆவணங்களைப் பெற்று விசாரணை- சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்- பதிவுகள் செய்ய வந்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை.
பழனி தண்டாயுதபாணி சுவாமி அறக்கட்டளைக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான இடம் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமானது. மோசடி புகாரி பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்த மாவட்ட பதிவாளர் சசிகலா சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியினை நீக்கம் செய்யப்பட்டனர்.
இடத்தை போலி ஆவணங்களை கொண்டு விற்பனை செய்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகதாஸ் சுவாமிகள் மற்றும் இடத்தை வாங்கிய பழனி எடுத்த டி.கே.என். புதூர் கிராமத்தைச் சேர்ந்த சேதுபதி, உடுமலை அருகே உள்ள பாப்பன்குளம் கிராமத்தைச் சார்ந்த வெள்ளத்துரை ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே அதிரடி ஆக்ஷன்... அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு பரப்பிய நபர் அதிரடி கைது...!
வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தலை மறைவாக இருந்து வரும் நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. சிபிசிஐடி போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் பத்திற்கும் மேற்பட்ட போலீசார் பழனிக்கு வந்து பத்திரபதிவு அலுவலகம், கோயில் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட இடத்தில் விசாரணை செய்தனர்.
முதல் கட்டமாக கோயில் அலுவலகத்திற்குச் சென்ற சிபிசிஐடி போலீசார் நிலங்கள் சம்பந்தமான பிரிவில் பணியாற்றும் கண்காணிப்பாளர் முருகானந்தத்திடம் விசாரணை செய்தனர். கோயில் சார்பில் வைத்துள்ள ஆவணங்கள் மற்றும் குற்றச் சம்பவத்தை தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து விசாரணை செய்து அனைத்தையும் வீடியோ காட்சிகளாக பதிவு செய்து கொண்டனர்.
தொடர்ந்து மோசடியாக பதிவு செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று சி.பி.சி.ஐ.டி குழு பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று பத்திரப்பதிவு நடைபெற்ற தினத்தில் நடந்த நிகழ்வுகளை சிசிடிவியில் பார்த்து ஆய்வு செய்தனர்.
மேலும் பத்திர பதிவிற்கு வருகை தந்த நபர்களின் விவரங்களையும் கேட்டறிந்தனர். தொடர்ந்து பத்திர பதிவு செய்ய கொடுக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்து நகல்களையும் அதிகாரிகள் பெற்றுச் சென்றனர். சிபிசிஐடி போலீசாரின் விசாரணையால் பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
இதையும் படிங்க: 2,000 ஏசி மின்பேருந்துகள்.. வருமானம் பெற புதிய ஐடியா! கட்டணம் விஷயத்தில் முதல்வர் விஜயின் கறார் முடிவு?