நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மற்றொருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் இதுவரை ஏற்கனவே 11 பேரை சிபிஐ கைது செய்திருக்கிறது. தற்பொழுது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
நடப்பாண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் ஆர்.சி.சி. என்ற பிரபல பயிற்சி மையத்தை நடத்தி வந்த சிவராஜ் ரகுநாத் மோதிகாவோங்கரை சிபிஐ கைது செய்தது. இதுவரை இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் சுமார் 25 லட்சம் மாணவர்கள் தோற்றனர். தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது பின்னர் வெளியானது. மகாராஷ்டிராவில் கசியவிடப்பட்ட வினாத்தாள் அதிக விலைக்கு ராஜஸ்தான் பயிற்சி மையங்களுக்கு விற்கப்பட்டு, அங்கிருந்து கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ரத்தான நீட் தேர்வு..!! விரக்தியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு..!! கதறும் பெற்றோர்..!!
சிபிஐ விசாரணையில், ஏப்ரல் 23 அன்று அதாவது தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பே சிவராஜ் மோதி மோசடி நெட்வொர்க்கிடம் இருந்து வினாத்தாளைப் பெற்றதாகக் கண்டறியப்பட்டது. அவரது மொபைல் போனில் இருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் நீட் தேர்வில் இயற்பியல் வினாத்தாள் கசிய மூலையாக செயல்பட்ட மற்றொரு நபரான மனிஷா சிங்காரை புனேவில் வைத்து சிபி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வேதியல் மற்றும் தவரவியல் உள்ளிட்ட பேராசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில் இவர் சேத் இராலால் சராப் பார்ட்ஷாலா என்ற நிறுவனத்தில் பணிபுரிந்ததும் குறிப்பாக இவர் இந்த நீட் இயற்பியல் வினாத்தாள் வடிவமைப்பில் மிக முக்கிய பங்காற்றியதும் தற்போது தெரிய வந்துள்ளது. இந்த இயற்பியல் வினாத்தாள் கசி விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட நபரை தற்போது சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செய்யாதே..!! நாளை மாநிலம் தழுவிய திக ஆர்ப்பாட்டத்திற்கு திமுக ஆதரவு..!!