சண்டிகர் நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு முக்கியமான தீர்ப்பு, இந்திய சட்டத்தில் பாலியல் தொல்லைக்கான வரையறையை மேலும் விரிவாக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வழக்கில், 62 வயதான அசோக் குமார் என்பவர் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று காலையில், ஒரு பெண்ணின் வீட்டு வாசலில் சுத்தம் செய்துகொண்டிருந்த அவரை நோக்கி அணுகி, ஆபாசமான வார்த்தைகள் பேசியதுடன், பணத்தை வீசியும், கண் அடித்தும், flying kiss கொடுத்தும் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சண்டிகர் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதித்துறை நடுவர் சச்சின் யாதவ் தீர்ப்பளித்தார். நீதிமன்றம், குற்றவாளியை இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354A மற்றும் பிரிவு 509 ஆகியவற்றின் கீழ் குற்றவாளி என தீர்மானித்தது. நீதிமன்றத்தின் முக்கிய கருத்து கண் அடிப்பது மற்றும் flying kiss கொடுப்பது போன்ற சைகைகள் வெறும் வார்த்தைகள் இல்லாமல், சொல்லாத வகையில் பாலியல் தொல்லை தான் என கூறப்பட்டது.

இத்தகைய செயல்கள் பெண்ணுக்கு அசௌகரியத்தையும், அவமான உணர்வையும் ஏற்படுத்துவதால், அவை IPC பிரிவு 354A-ன் கீழ் வருகின்றன என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியது. பாதிக்கப்பட்ட பெண் தனது வாக்குமூலத்தில், குற்றவாளி தொடர்ந்து ஆபாச சைகைகளைச் செய்ததாகவும், அது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். குற்றவாளி தரப்பில் இந்த சைகைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவை என்று வாதிடப்பட்டது.
இதையும் படிங்க: வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சா எப்படி? தீர்ப்பு எங்க பக்கம் தான்..! ராமதாஸ் உறுதி..!
இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டு, தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏனெனில், இதுவரை பெரும்பாலும் வார்த்தைகள் அல்லது உடல் தொடர்பு சார்ந்த செயல்களை மட்டுமே பாலியல் தொல்லையாகக் கருதப்பட்ட நிலையில், இப்போது சைகை மூலமான தொல்லைகளையும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு வழக்கு... இதை செய்யுங்க..! அமைச்சர் ஐ. பெரியசாமியின் மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்...!