பாமகவின் தலைமைப் பதவி குறித்த பிரச்சினை 2025-ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்தே தீவிரமடைந்தது. அன்புமணி ராமதாஸின் தலைவர் பதவிக்காலம் மே 28, 2025 அன்று முடிவடைந்ததாக ராமதாஸ் தரப்பு கூறி வருகிறது. அதன்பிறகு ராமதாஸ் தானே கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றதாக அறிவித்து, தேர்தல் ஆணையத்துக்கும் தகவல் அளித்திருந்தார்.
ஆனால், தேர்தல் ஆணையம் 2025 ஜூலை 30-ஆம் தேதி ஒரு கடிதத்தை அனுப்பியது. அந்தக் கடிதத்தில், தமிழக சட்டமன்றத் தேர்தல் உள்ளிட்ட வரவிருக்கும் தேர்தல்களுக்காக பாமகவுக்கு 'மாம்பழம்' சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கடிதம் அன்புமணி ராமதாஸின் சென்னை முகவரிக்கு அனுப்பப்பட்டது. இதைத்தான் ராமதாஸ் தரப்பு கடுமையாக எதிர்த்துள்ளது. தாங்கள் கட்சியின் உண்மையான தலைவரும் இன்கம்பென்ட் பிரசிடென்ட்டும் என்றும், எனவே அந்தக் கடிதம் தங்கள் முகவரிக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்றும் வாதிட்டுள்ளனர்.

இந்தக் கடிதம் தவறான முகவரிக்கு சென்றதால், அது அன்புமணி தரப்புக்கு சாதகமாக அமைந்துவிட்டதாகவும், இது நியாயமற்றது என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், அந்த தேர்தல் ஆணைய கடிதத்தை ரத்து செய்து, புதிதாக தங்கள் முகவரிக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் என்று ராமதாஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. ராமதாஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை பிப்ரவரி இரண்டாம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மாம்பழ சின்னம் யாருக்கு? ரத்து பண்ணுங்க...! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு பிப். 2 ல் விசாரணை..!
மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 24 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்திருப்பதாகவும் மாம்பழம் சின்னம் தங்கள் தரப்புக்கு உரியது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தீர்ப்பு வருவதற்கு உள்ளேயே வானத்துக்கும் பூமிக்கும் குதித்தால் எப்படி என்றும் தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நீங்க தான் தைரியமான ஆளாச்சே! செஞ்சு காட்டுங்க!! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராமதாஸ் கொடுத்த டெரர் டாஸ்க்!