காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவு அமைந்துள்ளது. இது அடையார் ஆற்றின் மூலமாகவும், சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முதன்மை ஆதாரமாகவும் இருக்கிறது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3.645 டி.எம்.சி ஆகும். ஏரியின் நீளம் சுமார் 11 கி.மீ. மற்றும் அகலம் 4 கி.மீ. என்பதால், இது காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று. அடையார் ஆற்றுடன் இணைந்துள்ள இது, மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீரை சேமிக்கிறது. கிருஷ்ணா ஆற்றிலிருந்து நீர் தாண்டி வருவதன் மூலம் சென்னையின் நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இது உதவுகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 2,170 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 24 அடி, தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20.8 அடியை எட்டியுள்ளது.
மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தொட்டால் உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்படும். இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி உள்ள மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி குன்றத்தூர், திருநீர்மலை, சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், காவனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏரியை நீர்வளத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை மக்களே உஷார்.... கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்... தற்போதைய நிலவரம் இதோ...!
அடுத்த இரண்டு தினங்களுக்கும் கனமழைக்கான வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இநேற்று செம்பரம்பாக்கம் ஏரிக்கு காலை 300 கனடி நீரானது வந்து கொண்டிருந்த சூழ்நிலையில் தற்போது 2,170 கன அடி நீராக அதிகரித்துள்ளது. குறிப்பாக பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரம்பத்தூர், திருவள்ளூர் கிருஷ்ணா நதிநீர். இது நான்கு பகுதியிலிருந்து அதிக அளவில் நீர் வருவதன் காரணமாக நேற்று மாலை தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. நீர்வரத்து அதிகரிக்கப்பட்டதன் காரணமாக தற்போது 500 கணடியாக திறக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக அடையாற்று கால்வாய் ஓரம் இருக்கக்கூடிய தாழ்வான பகுதியில் வசித்து வரும் திருமுடிவாக்கம், குன்றத்தூர் இது போன்ற ஒன்பது கிராம மக்களுக்கு வெள்ள அபாயத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது. கூடுதாலக நீர் திறக்கப்படுவதன் காரணமாக அந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஏரி ஓரம் நின்று புகைப்படமோ எடுப்பதோ, துணி துவைப்பதோ, ஆடு மாடுகளை குளிக்க வைக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரித்துள்ளது.
தொடர்ந்து இந்த செம்பரம்பாக்கம் ஏரியை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கான தனிக்குழு மானிட்டர் ஆபீசராக கந்தசாமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்களும் இந்த தொடர்ந்து இதனை கண்காணித்து வருகிறார்கள். ஏனென்றால் இந்த அதிக மழையானது வந்தாலும் குடிநீருக்கு சென்னைக்கு தேவைப்படும் அதிக நீரும் இங்குதான் பயன்படுத்தப்படுகிறது. அதே போன்று பாதிப்பு ஏற்பட்டாலும் இதன் மூலமாகதான் ஏற்படுகிறது. இருப்பினும் கடந்த ஆண்டு அது முந்தைய ஆண்டுகள் போல இல்லாமல் தற்போது படிப்படியான நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் 24 அடி வரைக்கும் நீரை தேய்க்கி வைக்க முடியும்.
ஆனால் பாதுகாப்பு கருதி ஏனென்றால் திடீரன மழை பெய்தால் அதிக அளவில் நீர் வரத்து விரிக்க வந்தால் அதனை எப்படி பாதுகாப்பது என்பதற்காகதான் படிப்படியாக நீரை வெளியேற்றி வருகிறார்கள். எந்த ஒரு அர்த்தமும் பரவண்டாம் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். தற்போது 20 அடியதான் 21 அடியை நெருங்கி இருக்கிறது 20.84 அடியாக இருக்கிறது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அடையாற்று கால்வாய்க்கு 500 கணடியாக திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு... வெள்ள அபாய எச்சரிக்கை...! எந்தெந்த பகுதிகள் தெரியுமா?