செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அத்திவாக்கம் பகுதியில் சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கூட்டு பாலில் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் பகுதியை சேர்ந்த கௌதமன் என்ற 17 வயது சிறுவன் நேற்று நள்ளிரவு தனது இருசக்கர வாகனத்தில் 16 வயது சிறுமி மற்றும் 14 வயது சிறுமி அழைத்துக் கொண்டு சொந்த ஊரான மதுராந்தகம் அருகே உள்ள கீழக்காண்டை பகுதிக்கு சென்று உள்ளார் . தேவத்தூர் அருகே இரண்டு பேர் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சிறுவன் மற்றும் சிறுமிகள் சென்ற இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து உள்ளனர் .
பின் தொடர்வதை அறிந்த சிறுவன் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியுள்ளான். அத்திவாக்கம் பகுதியில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து உள்ளது. பின் தொடர்ந்தவர்கள் வருவதைக் கண்டு உடனடியாக சிறுவன் 16 வயது சிறுமியை மட்டும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று உள்ளான் . காயமடைந்த 14 வயது சிறுமியை நள்ளிரவில் அங்கேயே விட்டு சென்றுள்ளான்.
இதையும் படிங்க: கவலையை விடுங்க... வந்தாச்சு கேஸ் சிலிண்டருக்கு மாற்று... ஒரே நாளில் விறுவிறு விற்பனை...!
பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிறுமியை அத்திவாக்கம் ஏரி பகுதிக்கு தூக்கி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இரவு முழுவதும் அங்கிருந்து இருந்த சிறுமி அதிகாலையில் தானே செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார் . மருத்துவரிடம் நடந்ததை சிறுமி தெரிவித்துள்ளார் . மருத்துவர்கள் அளித்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் உடனடியாக தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
தற்போது 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான ஆவடி பகுதியை சேர்ந்த பாலாஜி (எ) காக்கா பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: திமுகவிற்கு நடுக்கம் தொடங்கிவிட்டது! திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் மோடி அதிரடி பதிவு!