மக்களுடைய 17 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகாக வேளச்சேரி பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை திட்டம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. இதன் மூலமாக மக்களுடைய பொதுப்போக்குவரத்து சேவை என்பது எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.
சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை ஏற்கனவே பறக்கும் ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. இதன் அடுத்த கட்டமாக, வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் பாதையை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டது. நில எடுப்புப் பிரச்சனைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் இருந்த இந்தப் பணிகள், தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன.
2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் 2013ம் ஆண்டு முடிவடைந்திருக்க வேண்டும் 495 கோடி ரூபாய் மதிப்பீட்டில முடிக்க வேண்டிய திட்டம் ஆதம்பாக்கம் தில்லை கங்காநகர் பகுதியில ஏற்பட்டிருந்த அந்த இளம் கையகப்படுத்துவதில ஏற்பட்டிருந்த சிக்கல்கள் காரணமாக பணிகள் என்பது தாமதம் என்பது ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒரு வழியாக பணிகளை நிறைவு பெற்று தற்போது இந்த திட்டம் என்பது மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. இதன் மூலமாக சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரைக்கும் இயக்கப்பட்டு வந்த பறக்கும் ரயில் சேவை தற்போது பரங்கிமலை வரைக்கும் நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: இந்த தேர்தலுக்கு தண்ணீர் போல் பாயப்போகும் வைட்டமின் ‘ப’... ஆர்.பி.உதயகுமார் சூசக பேச்சால் ர.ர.க்கள் ஹேப்பி...!
தினந்தோறும் 43 பறக்கும் ரயில் சேவைகள் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் வேளச்சேரியிலிருந்து பரங்கி மலைக்கு மூன்று ரயில்களும், பரங்கி மலையிலிருந்து வேளச்சேரிக்கு இரண்டு ரயில்களும் என மொத்தமாக 47 ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக அறிவிப்பு என்பது வெளியிடப்பட்டிருக்கிறது. இன்று காலை 5 மணிக்கு இந்த வழித்தடத்தில பறக்கும் ரயில் சேவை என்பது தொடங்கியது. பெருவாரியான மக்கள் இதனால் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நீங்கள் மயிலாப்பூர் அல்லது திருவான்மியூரிலிருந்து நேரடியாக பரங்கிமலை சென்று, அங்கிருந்து மெட்ரோ ரயில் அல்லது செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்களுக்கு எளிதாக மாற முடியும்.
இதன் காரணமாக வேளச்சேரி, ஆதம்பாக்கம் மக்கள் இனி பஸ் அல்லது ஆட்டோவை நம்பி இருக்காமல் நேரடியாக எழும்பூர் அல்லது செங்கல்பட்டு செல்லும் ரயில்களைப் பிடிக்க பரங்கிமலைக்கு போக முடியும். அதேபோல் பரங்கிமலையில் பறக்கும் ரயில், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் என மூன்றுமே ஒரே இடத்தில் சந்திப்பதால் பயண நேரம் பெருமளவு குறையும். அதேபோல் வேளச்சேரி-விமான நிலையம் செல்லும் உள்வட்டச் சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.
இதையும் படிங்க: ஓமனில் ட்ரோன் தாக்குதல்..! 2 இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!