சென்னை மாநகராட்சியில் லஞ்சம் வாங்கியது, பொதுப் பணத்தை தவறாகப் பயன்படுத்தியது மற்றும் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆறு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் நான்கு மூத்த அதிகாரிகள் அடங்குவது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி ஆணையர் சமீரன் இந்த நடவடிக்கையை உத்தரவிட்டுள்ளார். மேலும், நான்கு பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் இந்த அதிகாரிகள் மீதான புகார்கள் நீண்ட காலமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, திட்ட ஒப்பந்தங்கள், சான்றிதழ்கள் வழங்கல், அனுமதிகள் மற்றும் பொதுப் பணிகள் தொடர்பான விவகாரங்களில் லஞ்சம் கோரியதாகவும், பணத்தைப் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த அதிகாரிகளின் செயல்பாடுகள் மாநகராட்சியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தியதுடன், பொதுமக்களின் அன்றாடப் பணிகளையும் பாதித்துள்ளன.இந்த சம்பவம் சென்னை மாநகராட்சியில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைகள் மற்றும் உள் கண்காணிப்பு அமைப்புகளின் புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: ரூ.2000 கோடிப்பே... சென்னை மாநாகராட்சி தலையில் இறங்கியது பேரிடி... நாறி நாற்றமெடுக்கப் போகுது...!
மாநகராட்சி நிர்வாகம் இத்தகைய ஊழல் செயல்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம், ஊழியர்கள் மத்தியில் ஒழுக்க உணர்வை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டுள்ளது.பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்குப் பிறகு, மாநகராட்சி சார்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படும் அதிகாரிக்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டெண்டர் முறைகேடு...! சென்னை மாநகராட்சியில் 35 டெண்டர்கள் ரத்து..! தமிழக அரசு அதிரடி முடிவு..!!