டெங்கு காய்ச்சல் பாதிப்பைப் பொறுத்தவரை, கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக பருவநிலை மாற்றம் காரணமாக கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து வருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, சென்னையில் தொடர்ந்து டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. செப்டம்பர் 15ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 133 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதேபோல், செப்டம்பர் 17ஆம் தேதி ஒரே நாளில் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். செப்டம்பர் 20ஆம் தேதி ஒரே நாளில் 228 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுபோன்று தொடர்ந்து டெங்கு காய்ச்சலால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, நேற்றைய தினம் சென்னையில் மட்டும் 72 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் மட்டும் 605 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து, 1,290 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையை உலுக்கும் டெங்கு காய்ச்சல் பரவல்... இந்த ஏரியாவில் மட்டும் இத்தனை பேருக்கு பாதிப்பா?... வெளியானது அதிர்ச்சி காரணம்...!
இதன் மூலம் செப்டம்பர் மாதத்தில் சென்னையில் டெங்கு பாதிப்பு இருமடங்காக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 ஆயிரம் என்ற அளவில் இருந்த டெங்கு பாதிப்பு, தற்போது 20 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் உள்ளது.
தமிழகத்தில் சென்னையைத் தாண்டியும் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு காணப்படுகிறது. குறிப்பாக செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, கோவை, திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் டெங்கு பரவல் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுவாக சென்னையில்தான் அதிகப்படியான டெங்கு காய்ச்சல் பாதிப்பு பதிவாகி வருகிறது.
அந்த வகையில், சென்னையில் நேற்றைய தினம் மட்டும் 72 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ஆகஸ்ட் மாதத்தில் 605 பேரும், செப்டம்பர் மாதத்தில் 1,290 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு 17,200 என்ற அளவில் இருந்த டெங்கு பாதிப்பு, தற்போது 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. டெங்கு காய்ச்சலைத் தொடர்ந்து, மற்ற வைரஸ் காய்ச்சல்களின் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஸ்க்ரப் டைபஸ், H1N1 போன்ற காய்ச்சல் பாதிப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண காய்ச்சல் மட்டுமின்றி, டெங்கு பாதிப்புக்கான அறிகுறிகள் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள் இருந்தால், உடனடியாக டெங்கு காய்ச்சல் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு குறைவு: சுகாதார செயலாளர் தாரேஸ் அகமது பேட்டி!