தமிழ்நாடு முழுவதும் வரும் ஜூலை 31, 2026 (வெள்ளிக்கிழமை) முதல் கறிக்கோழி விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் சுமார் 60,000 சிக்கன் கடைகள் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டுடன் புதுச்சேரியிலும் இந்த விற்பனை நிறுத்தம் அமல்படுத்தப்படும், மேலும் கேரளா உள்ளிட்ட சில பகுதிகளிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அசைவ உணவு பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முடிவு தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு கோழி வணிகர் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வணிகர்கள், கோழி உற்பத்தியாளர்களின் தவறான நடைமுறைகளுக்கு எதிராக இந்த போராட்டத்தை மேற்கொள்வதாகத் தெரிவித்தனர். மாநிலத் தலைவர் துரைராஜ் உள்ளிட்ட தலைவர்கள் இதை வலியுறுத்தினர். புதன்கிழமை மீண்டும் கூட்டம் நடைபெற உள்ளது, அதில் கேரள வணிகர்களும் பங்கேற்கவுள்ளனர்.

போராட்டத்தின் முக்கிய காரணம்கோழி உற்பத்தியாளர்கள், விற்பனைக்கு அனுப்பும் கோழிகளுக்கு கழுத்து வரை தீவனம் மற்றும் தண்ணீர் கொடுத்து எடையை அதிகரிக்கும் நடைமுறையைப் பின்பற்றுவதாக வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். விற்பனைக்கு 15 மணி நேரத்துக்கு முன்பே தீவனம் வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டு நெறிமுறையை உற்பத்தியாளர்கள் கடைபிடிக்காததே இதற்கு முக்கிய காரணம்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் போறீங்களா..? இதை கவனிங்க..! செல்போன்களுக்கு தடை..! முக்கிய அறிவிப்பு..!!
தமிழ்நாடு முழுவதும் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தப்படும் என்று 60,000 கடைகளில் கறிக்கோழி விற்கப்படாது என்றும் கோழி வணிகர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உற்பத்தியாளர்கள் கோழிகளை அனுப்பும் போது, கழுத்து வரை தீவனம் கொடுத்து அனுப்புவதாகவும், இதனால் சுத்தமான கோழிகளை விற்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கண்துடைப்புக்காக கல்வி அமைச்சர் ராஜினாமா... நீட் ஒழியனும்..! திருச்சி சிவா குற்றச்சாட்டு.!