ஏஐ மாநாட்டில் இளைஞர் காங்கிரஸார் அரை நிர்வாண போராட்டத்துடன் நடத்தியதை கண்டித்து புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியினர் நேற்று மாலை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்பொழுது ராகுல் காந்தியின் உருவம் எரித்து அவர்கள் போராட்டத்தை வலுப்படுத்தினார்கள்.
அப்பொழுது காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஆட்கள் இருந்தும் யாரும் வெளியே வந்து தடுக்கவில்லை. அதே நேரத்தில் போலீசாருக்கும் இந்த தகவல் தெரியாது. இந்த நிலையில் தான் காங்கிரஸ் தொண்டர்கள் ஒட்டுமொத்தமாக திரண்டு பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். எல்லைப்பிள்ளையார் சாவடியில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸார் கொடியுடன் கூடினார்கள். இத்தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்து இருபுறமும் தடுப்புகளை வைத்து தடுத்தனார். இருப்பினும் அங்கு குடியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் பாரதிய ஜனதாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்.
இந்த நிலையில் கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே ஓடி வந்த பாஜகவினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். உடனே அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் கற்கள் மற்றும் காலனிகளை வீசி தாக்குதல் நடத்த, அதேபோல் பாரதிய ஜனதா கட்சியினரும் அங்கிருந்த கற்களையும், காலணிகளையும் வீசி பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்பிடம் கடுமையான மோதல் நடைபெற்றது. இரு தரப்பிலும் ஏராளமானனோர் தலையிலும், கையிலும் காயமடைந்து ஓட தொடங்கினார்கள்.
இதையும் படிங்க: AI மாநாட்டு பகுதியில் மேலாடையின்றி போராட்டம்..!! 4 காங்கிரஸ் தலைவர்கள் கைது..!! கோர்ட்டில் ஆஜர்..!!
பாதுகாப்பு பணியில் இருந்த காவல் கண்காணிப்பாளர் வம்சர் ரெட்டி மீதும் தாக்குதல் நடந்தது. ஒரு சில காவலர்களுக்கும் தாக்குதல் நடந்தது. ஒரு கட்டத்தில் பாரதிய ஜனதா காங்கிரஸ் கட்சியினர் வந்து பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி உருட்டுக்கட்டைகளை எடுத்து வந்து அடிக்க வந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் வந்து இரு தரப்பினரும் சமாதானப்படுத்தினார்கள். இருப்பினும் காங்கிரசாரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சியினர் கட்சி அலுவலத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டதோடு, காங்கிரஸ் கட்சியினர் முற்றிலுமாக அங்கிருந்து அனுப்பப்பட்டனர். இருதரப்பினரும் மோதிக் கொண்டதால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
புதுச்சேரியில் பாஜக காங்கிரஸ் நேரடி மோதல்.
நேற்று ராகுல் காந்தி கொடும்பாவி எதிர்த்ததை தொடர்ந்து காங்கிரஸ் பாஜக அடிதடி. pic.twitter.com/URIowNdhDv
— Rajbjp (@rajsd_bjp) February 21, 2026
இதையும் படிங்க: “வெள்ளைக்காரனையே விரட்டுனவங்க... கொள்ளைக்காரனிடம் அடிபணிவோமா”... திமுகவை மீண்டும் சீண்டும் காங்கிரஸ்... தெருத்தெருவாய் ‘திகு திகு’ போஸ்டர்கள்...!