கன்னியாகுமரி மாவட்டத்தின் உட்கட்டமைப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சுமார் ₹1,785 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பட்டயங்களைத் திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், 25,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்குப் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
மார்த்தாண்டம், கோதநல்லூர் பகுதிகளில் நவீன தினசரி சந்தைகள், கிள்ளியூர் மற்றும் பத்மநாபபுரம் பகுதிகளில் புதிய பேருந்து நிலையங்கள் என ₹302.86 கோடி மதிப்பிலான பணிகள் மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன. மேலும், வேம்பனூர் மற்றும் தேரூர் குளங்களில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் பணிகளும் இதில் அடங்கும். தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ₹147.15 கோடி மதிப்பில் அலை தடுப்புச்சுவர் நீட்டிப்பு, இரையுமன்துறை மற்றும் கீழ கடியப்பட்டணத்தில் தூண்டில் வளைவு மற்றும் கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் ₹46.90 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய தீவிர சிகிச்சை பிரிவு (ICU) கட்டிடம் மற்றும் நவீன MRI கருவி வசதியை முதல்வர் திறந்து வைத்தார். மேலும், ₹3.32 கோடி மதிப்பில் பள்ளிக் கட்டிட வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. தோவாளை மலர் சந்தையில் உயர்மட்ட மேற்கூரை, கல்லடிமாமூட்டில் ₹3 கோடி மதிப்பில் மினி ஸ்டேடியம் மற்றும் திருப்பதிசாரத்தில் நெல் விதை சேமிப்புக் கிடங்கு ஆகியவையும் பயன்பாட்டிற்கு வந்தன.மாவட்டம் முழுவதும் ₹66.52 கோடி மதிப்பில் 595 ஊரக வளர்ச்சிப் பணிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: விஜய்யை வீழ்த்தும் வித்தை எனக்கு தெரியும்! திமுகவில் விருப்பமனு அளித்த பி.டி. செல்வகுமார் சவால்!
கன்னியாகுமரி மாவட்டத்தின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றுவதே இந்த அரசின் இலக்கு என தெரிவித்த முதலமைச்சர், நிலுவையில் உள்ள மற்ற திட்டங்களும் விரைந்து முடிக்கப்படும் என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை.. பெற்று தர தொடர்ந்து போராடுவோம்! முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதம்..!!