திருவாரூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் உழைப்பைத் தமிழக அரசு மதிக்குமா என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளைக் கையாளும் கடினமான பணியைத் தினந்தோறும் மேற்கொண்டு வரும் இத் தொழிலாளர்களுக்கு அவர்களின் உடல் உழைப்புக்கு உரிய கூலி கிடைக்க வேண்டும் என்பது முற்றிலும் நியாயமான கோரிக்கை என்று அவர் தெரிவித்தார்.
இவர்கள் சுமப்பது வெறும் நெல் மூட்டைகள் மட்டுமல்ல. விவசாயியின் பல மாத உழைப்பின் பயனை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் முக்கியப் பொறுப்பையும் சுமக்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.நெல் கொள்முதல் செய்யப்பட்டு அரிசியாக மாற்றப்படுகிறது.

அந்த அரிசிதான் மக்களின் அன்றாட உணவின் அடிப்படை. எனவே, நெல் கொள்முதல் சங்கிலியில் ஏற்படும் எந்தவொரு தடங்கலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பையும் நேரடியாகப் பாதிக்கக்கூடியது என்று வேல்முருகன் வலியுறுத்தினார்.தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி ஒரு வாரத்திற்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நெல் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மூட்டைகள் தேங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அறுவடை செய்த நெல்லை உடனுக்குடன் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: "சௌமியா அன்புமணியை பார்த்து கத்துக்கோங்க"..! "EXAMPLE"..! பேரவையில் பாராட்டு..!!
எனவே, சுமை தூக்கும் தொழிலாளர்களின் நியாயமான கூலி உயர்வு கோரிக்கைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். நெல் கொள்முதல் பணிகளைத் தடையின்றி நடத்தி, விவசாயிகளின் விளைபொருள்கள் மழையிலோ, வெயிலிலோ வீணாகாமல் பாதுகாக்கத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அவர் வலியுறுத்தினார்
இதையும் படிங்க: "சிண்டிகேட் கரூர் பேங்க்"..! விடாமல் சீண்டிய நிர்மல் குமார்... கொந்தளித்த திமுக..!!