இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் டெல்லி சென்றிருந்த நிலையில் இன்றைய தினம் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களை சந்திப்பார் என சொல்லப்பட்டிருந்தது. தற்போது அந்த சந்திப்பு ரத்து என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இரண்டு நாள் அரசு முறை பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் டெல்லி சென்றிருந்தார். நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்திருந்தார். அதன் பிறகு கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் சோனியா காந்தி ராகுல் காந்தி உள்ளிட்டவர்களைச் சந்திப்பதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. இன்றைய தினம் 10 மணிக்கு அவர் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதலமைச்சர் அவசரமாக சென்னை கிளம்ப வேண்டிய சூழல் இருப்பதாகவும், இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியவரை இன்று சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இரண்டாவது தினமாக இன்று காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்திப்பது மட்டுமே திட்டமிடலாக இருந்தது. இந்த சூழல்லில் அந்த சந்திப்பை ரத்து செய்துவிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவசரமாக சென்னை திரும்புவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விடிந்ததும் பயங்கரம்...!! - தவெக கொடியுடன் சென்று திமுக அலுவலகம் சூறையாடல்... நடந்தது என்ன?
சரியாக 10 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு 12 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நாள் அரசு முறை பயணம் என்பது மரியாதை நிமித்தமாக சந்திப்பாக இருந்தாலும் கூட பிரதமரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்திருந்தார். இரண்டாவதாக கூட்டணி கட்சி என்ற முறையில், அதாவது தனி பெருமான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத ஒரு சூழலில் முதன் முதலாக ஆதரவு கரம் நீட்டியது காங்கிரஸ்.
காங்கிரஸ்னுடைய ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவின் பெயரில் நிபந்தனையோடு கூட்டணி அமைக்கப்பட்டது. கூட்டணி கட்சி என்ற கூட்டணி கட்சி தலைவர் மற்றும் முதலமைச்சர் என்ற முறையிலும் கேரளா முதலமைச்சர் பதவியேற்பு விழாவின் பொழுது கூட தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் செல்லவில்லை. எனவே இவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முதலாக கூட்டணி கட்சி தலைவர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டசூழலில் இன்று 10 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் முதலமைச்சர் அவசரமாக சென்னைக்கு வர வேண்டிய சூழல் இருப்பதாகவும் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று விஜய் சந்திக்க நேரம் கேட்டிருந்ததாகவும், ஆனால் அவரது குஜராத் சுற்றுப்பயணம் காரணமாக சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகினது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அன்பிற்கினிய இஸ்லாமிய உறவுகளே... முதலமைச்சர் விஜய் பக்ரீத் பண்டிகை வாழ்த்து...!