தமிழக காங்கிரஸ் கட்சி, உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திடம் (த.வெ.க.) 30 சதவீத இட ஒதுக்கீடு கோர முடிவு செய்துள்ளது. சென்னையில் நேற்று மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரிடம், கட்சியினர் இந்த வலியுறுத்தலை முன்வைத்தனர்.
தமிழக காங்கிரஸ் கட்சி, உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திடம் (த.வெ.க.) 30 சதவீத இட ஒதுக்கீடு கோர முடிவு செய்துள்ளது. சென்னையில் நேற்று மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரிடம், கட்சியினர் இந்த வலியுறுத்தலை முன்வைத்தனர்.
மூத்த நிர்வாகிகள் சிலர் பேசுகையில், “உள்ளாட்சித் தேர்தலில் மூன்று மேயர் பதவிகள், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் துணை மேயர் பதவிகள் உட்பட மொத்தம் 30 சதவீத இடங்களை த.வெ.க.விடம் கேட்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து பதவிகளிலும் கணிசமான இட ஒதுக்கீடு பெற்றால்தான் காங்கிரஸ் தொண்டர்களுக்கு உற்சாகம் ஏற்படும்” என்று வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: காங்கிரசுக்கு டாட்டா காட்ட செல்வப்பெருந்தகை முடிவு?! தலைவர் மாற்றத்தால் திமுகவில் இணைய திட்டம்?!

தி.மு.க. கூட்டணியில் குறைந்த அளவே இடங்கள் கிடைத்ததால் அதிருப்தியில் இருந்த காங்கிரஸ், த.வெ.க. உடனான புதிய கூட்டணியில் அதிக பங்கு கோருவதாக இந்த சந்திப்பில் தெளிவாகியுள்ளது. குறிப்பாக மேயர், துணை மேயர், முனிசிபல் சேர்மேன் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் காங்கிரஸுக்கு போதுமான இடங்கள் ஒதுக்க வேண்டும் என பலரும் மாணிக்கம் தாகூரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
காங்கிரஸ் தலைமை இந்த கோரிக்கையை த.வெ.க. தலைமைக்கு முறைப்படி எடுத்துச் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி கட்சிகளிடையே இட ஒதுக்கீடு பங்கீடு பேச்சு தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ் தரப்பின் 30 சதவீத கோரிக்கை த.வெ.க. எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது அரசியல் வட்டாரங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை தமிழக காங்கிரஸுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் எவ்வளவு இடங்களைப் பெறப் போகிறது என்பது விரைவில் தெளிவாகும்.
இதையும் படிங்க: மாணிக்கம் தாகூர் Vsபிரவீன் சக்கரவர்த்தி! தமிழக காங்., தலைவர் பதவிக்கு கடும் மோதல்!