தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் இன்று சென்னை பனையூர் தலைமை அலுவலகத்திற்கு பட்டு வேட்டி, சட்டையில் வந்தார். முதலமைச்சர் ஆன பிறகு இரண்டாவது முறையாக வருகை கட்சியின் தற்போதைய அரசியல் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அண்மையில் தவெகவில் இணைந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கட்சிப் பதவிகள் வழங்குவது தொடர்பாக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் வெற்றிக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், கட்சியின் அடித்தளத்தை விரிவுபடுத்தும் வகையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர்.

அதிமுகவில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் உட்பட பலர் சமீபத்தில் தவெகவில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு ஏற்புடைய கட்சிப் பொறுப்புகள், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகப் பதவிகள் வழங்குவது குறித்து விரிவான விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "ஓயாத பஞ்சாயத்து"..! ஆளுநரிடம் முறையிட்ட திமுக.. வரிசைக் கட்டி வந்த அதிமுக..!
பனையூர் தலைமை அலுவலகம் தவெகவின் மையமாக செயல்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் விஜய்யின் இந்த வருகை கட்சியின் உள் அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் முக்கிய அடியாக அமையும். முதல்வராகப் பதவியேற்ற பிறகு இது அவரது இரண்டாவது முறை பனையூர் அலுவலக வருகை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பட்டு வேட்டி சட்டையில் முதல்வர் விஜய் பனையூர் அலுவலகத்திற்கு வந்தடைந்தார். மாற்றுக் கட்சியிலிருந்து த.வெ.கவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்க பனையூர் அலுவலகத்திற்கு கோட் சூட் இல்லாமல் பட்டு வேட்டி சட்டையில் முதல்வர் விஜய் வருகை தந்தார்.
இதையும் படிங்க: "இஸ்லாமிய சிறைவாசிகள்"..! கையெழுத்து போட்டும் நடவடிக்கை இல்லை... சட்டத்துறை மீது வேல்முருகன் சரமாரி கேள்வி..!