மத்திய கயிறு வாரியம் சார்பில் பொள்ளாச்சி அம்பராம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் மற்றும் தென்னை நார் தொழிற்சாலைகள் உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடக, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தென்னை நார் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், தென்னை நார் கூட்டு குழும நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே
கலந்து கொண்டு, தென்னை நார் தொழிலை மேம்படுவது குறித்து உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.
தென்னை நார் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதற்கு அரசு முன்னெடுக்க வேண்டிய பணிகள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை உற்பத்தியாளர்கள் முன்வைத்தனர். பின்னர் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே செய்தியாளர்களிடம் பேசும் போது., சிறு குறு நடுத்தர தொழில், நாட்டின் முதுகெலும்பு என பிரதமர் மோடி தெரிவித்து வருகிறார், தமிழகத்தில் 8 ஆயிரம் தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளனர். தென்னை நார் தொழிற்சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, தென்னை மரம் ஒரு கற்பகவிருட்சம், தென்னையில் இருந்து பல்வேறு பொருட்கள் கிடைக்கிறது,காயர் தொழிலை மேம்படுத்த கூட்டுக் குடும்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
தென்னை நார் தொழில் மேம்படுத்த பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பொள்ளாச்சியில் கயிறு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் ஆய்வககூடம் அமைக்கப்படும் என்றும், தென்னை நார் தொழில் மேம்படுத்த திறன் மேம்படுத்த பயிற்சி வழங்கப்படும் எனவும், தமிழகத்தில் சிறு, குறு நடுத்தர தொழில்கள் மின்கட்டண உயர்வு பிரச்னையை சந்தித்து வருகிறது. தொழில் மேம்படுத்த தமிழக அரசு எந்த உதவியும் செய்வதில்லை.
இதையும் படிங்க: வெளிய போகாதீங்க மக்களே.. இந்த 2 ஊருக்கு மஞ்சள் அலர்ட்டாம்.. வானிலை மையத்தின் 'ஜில்' அப்டேட்..!
லஞ்சம், ஊழல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, போதை மாபியாவாக தமிழகம் உள்ளது. தமிழகம் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியுள்ளது. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக கூறுகின்றனர். அதில், பாதி பேருக்கு கூட செல்வது இல்லை. பெண்களுக்கு இலவசமாக பஸ் விடுவதாக கூறுகின்றனர். ஆனால், அவர்களே ஓசி பஸ் என சொல்கின்றனர். தமிழகத்துக்கு வரும் நிதி திட்டங்களுக்கு செயல்படுத்துவதாக கூறுகின்றனர். ஆனால், எந்த திட்டமும் முழுமையாக செயல்படுத்தவில்லை. நிதி நிலை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என செய்தியாளர்களிடம் இணை அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓடும் ரயில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் நினைவிருக்கா?... சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்...!