உலகின் பல்வேறு நாடுகளிலும் மீண்டும் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளான ஹாங்காங், சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து நாடுகளில் குறிப்பிடத்தகுந்த அளவு கொரோனா தொற்று பரவி வருகிறது.

குறிப்பாக சிங்கப்பூரில் கடந்த ஆண்டைவிட கொரோனா தொற்று 28 சதவீதம் உயர்ந்து, மே 3ம் தேதி நிலவரப்படி 14,200 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவை ஆட்டம் காண வைத்த கொரோனா.. 2வது அலை குறித்து புதிய தகவல் அம்பலம்..!
ஆசியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதால்தான் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மீண்டும் கொரோனா அலை வந்துள்ளது. சீனாவில், கடந்த கோடைக் காலத்தில் இருந்த அளவு உயர்ந்துள்ளது, தாய்லாந்தில் ஏப்ரல் மாதத்தில் நடந்த சாங்கரன் பண்டிகைக்குப்பின் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல் ஆபத்தான கட்டத்துக்கு வரவில்லை என்பதால், இப்போதிருந்த ஆசிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தத் தொடங்கியுள்ளன.
ஹாங்காங்:
ஹாங்காங்கில் கடந்த சில வாரங்களாக கொரோனாவில் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்களின் உடலில் எடுக்கப்படும் மாதிரிகளில் பாசிட்டிவ் இருப்பது மார்ச்சில் 1.7% ஆக இருந்து, தற்போது 11.4% மாக அதிகரித்துள்ளது. இது 2024 ஆகஸ்டில் இருந்த அளவைவிட அதிகமாகும். ஹாங்கில் இதுவரை 81 பேர் தீவிரத் தொற்றால் பாதிக்கப்பட்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்று 28% அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14.200 ஆக உயர்ந்து 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
தற்போது “எல்எப்.7” மற்றும் “என்பி.1.8” ஆகிய வைரஸ்களும், “ஜெஎன்.1” வகை வைரஸ்களும்தான் முக்கியமாகப் பரவுகின்றன. இவை கொரோனாவைப் பரப்பும் வைரஸ்களின் உருமாற்றமாகும். சிங்கப்பூரில் தினசரி கொரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 100 முதல் 130 வரை அதிரித்துள்ளது, ஆனால் ஐசியுவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை மிகச்சிலவாகவே இருக்கிறது.

சீனா:
சீனாவில் கொரோனா பரவல் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக படிப்படியாக உயர்ந்து கடந்த கோடை காலத்தில் இருந்த அளவு உயர்ந்துள்ளது. அதிலும் கடந்த இரு வாரங்களில் தொற்று இருமடங்காக உயர்ந்திருக்கிறது என்று சீன தோய் கட்டுப்பாடு மற்று தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து:
தாய்லாந்தில் கடந்த ஏப்ரல் மாதம் சாங்கரன் பண்டிகை நடந்தது. இந்த பண்டிகைக்குப் பின்புதான் அந்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது, அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.
கொரோனா பாதித்த இந்த நாடுகளுக்கு யாரேனும் பயணம் செல்ல திட்டமிட்டிருந்தால், பல்வேறு காரணங்களை ஆய்வு செய்தபின் பயணத்தை தொடரலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் நிலை, உங்களின் உடல்நிலை, பயணத்தின்போது கட்டுப்பாடுகள் ஆகியவற்றை மனதில் வைத்து பயணத்தை திட்டமிடலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஒருவேளை இந்த நாடுகளுக்கு பயணம் செல்வது தவிர்க்க முடியாது என்ற நிலைஇருந்தால், முன்னெச்சரிக்கையாக முகக்கவசம், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல், கைகளை நன்றாகக் கழுவுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். எப்போதுமே பயணிக்கும்போது சானிடைசரும், உடல்நலத்தில் தீவிரமான கண்காணிப்புடன் இருக்கும்பட்சத்தில் பயணிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவை ஆட்டம் காண வைத்த கொரோனா.. 2வது அலை குறித்து புதிய தகவல் அம்பலம்..!