அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரம் கிடைக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும், படித்துவிட்டு அதனை முதலமைச்சரிடமும் சொல்ல வேண்டும் - சிபிஐ செயலாளர் வீரபாண்டியன். ஆட்சியை கவிழ்க்கிற சிந்தனை எங்களுக்கு இல்லை, கல் அடிக்கும் சிந்தனை இல்லை, நிர்பந்தம் தருபவர்கள் நாங்கள் அல்ல. அதற்கு மாறாக எங்கள் ஆதரவு தேவைப்பட்டாலும், தேவைப்படாவிட்டாலும் . ஒருமுறைக்கு இருமுறை கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீது குற்றச்சாட்டை சொல்கிறபோது நிதானத்து சொல்லவேண்டும் என சிபிஐ செயலாளர் வீரபாண்டியன் சரமாரி தாக்கு.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மையூர், சம்பாதிநல்லூர், அத்தியூர், சிதண்டி, பிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வேட்பாளர் சுகந்திக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பொதுமக்களின் குறைகளை சட்டமன்றத்தில் எடுத்து பேச தோழர் சுகந்திக்கு வாக்களிக்க வேண்டும். ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு தவறானது பிழையானது, எந்த ஒரு காலத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையூட்டு பெற்றதில்லை, கையூட்டு வாங்கியதை வேடிக்கை பார்ப்பதில்லை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரம் கிடைக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும், படித்துவிட்டு அதனை முதலமைச்சரிடமும் சொல்ல வேண்டும்
இதையும் படிங்க: விஜய்க்கு ‘நோ’ சொன்ன கம்யூனிஸ்ட் கட்சி! த.வெ.க. கூட்டத்தில் பங்கேற்பது குறித்து அதிரடி நிலைப்பாடு! தவெகவுக்கு சிக்கல்!
கடந்த 100 ஆண்டு கால வரலாற்றில் கம்யூனிஸ்ட் கட்சியினர் எந்த ஊழல் வழக்குகளிலும் சிக்கவில்லை, நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படவில்லை, விவிலியத்திலும், இதிகாச புராணங்களிலும் இல்லாத மகத்தான சாதனையை கம்யூனிஸ்ட் கட்சிகள் படைத்திருக்கிறது. தவெகவிற்கு வெளியில் ஆதரவு என்பது கட்சி எடுத்த முடிவு, ஆதரவை விளக்கிக் கொள்ள வேண்டும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டால் அதனையும் கட்சிதான் முடிவு செய்யும், எங்களை பொறுத்தவரை நாங்கள் வெளியில் இருந்து தான் ஆதரவு அளிக்கிறோம், கூட்டணியில் இல்லை
ஆட்சியை கவிழ்க்கிற சிந்தனை எங்களுக்கு இல்லை, கல் அடிக்கும் சிந்தனை இல்லை, நிர்பந்தம் தருபவர்கள் நாங்கள் அல்ல. அதற்கு மாறாக எங்கள் ஆதரவு தேவைப்பட்டாலும், தேவைப்படாவிட்டாலும் நாங்கள் அரசின் பக்கம் இல்லை, உழைக்கும் மக்கள் மற்றும் ஏழைகளின் பக்கம் மட்டுமே நாங்கள் இருப்போம். ஆட்சியை கவிழ்க்கும் சிந்தனை எங்களுக்கு இல்லை. மதச்சார்பின்மையில் இந்த அரசு உறுதியாக இருக்க வேண்டும். ஏழைகள், உழைக்கிற மக்களின் நலனில் உறுதியாக இருக்க வேண்டும், அதில் தவறுகிற போது நாங்கள் எதிர்த்து போராடுவோம் குரல் கொடுப்போம்.
மதச்சார்பின்மையை கடந்து சென்று ஒன்றிய அரசுடன் தவெக திசை நகரும் என்றால் அது குறித்து உரிய முடிவு எடுப்போம். கடந்த ஆட்சியில் தொகுதி உடன்பாடு அவ்வளவுதான், உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு அவ்வளவுதான், ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் செய்கிற தவறுகளுக்கு எல்லாம் நாங்களா பதில் சொல்ல வேண்டும். நாங்கள் அளித்த ஆதரவு ஜனநாயகத்திற்கானது. அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் அறிவில் சிறந்தவர்கள், நிதானமாக இருப்பவர்கள், ஒருமுறைக்கு இருமுறை கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீது குற்றச்சாட்டை சொல்கிறபோது நிதானத்து சொல்லவேண்டும் என சிபிஐ செயலாளர் வீரபாண்டியன் பேட்டியளித்தார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?... கட் அண்ட் கறாராய் முடிவை சொன்ன சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்...!